ஏம்மா..ஷிவானி எதாவது போட்டோ போடுமா?ஏங்கிப்போன ரசிகர்கள்.. இதெல்லாம் ஒரு பிரச்சனையா?
சென்னை : இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இன்ஸ்டா குயின் ஷிவானி நாராயணன் இரண்டு நாட்களாக ரசிகர்களை ஏங்கவைத்துள்ளார்.
சினிமா நடிகைகளைவிட சின்னத்திரை நடிகைகளுக்குத்தான் இப்போது ஏகப்பட்ட மார்க்கெட். அதிலும் பிரைம் டைமில் ஒரு சீரியலில் நடித்துவிட்டால் போது, விரைவில் பிரபலமாகி விடலாம்.
அப்படி சீரியலில் அழுகு பதுமையாக, அமைதியின் சின்னமாக வந்த ஷிவானியின் ஆட்டத்தைப் பார்த்து மயங்கிப்போன ரசிகர்கள் அவரை இன்ஸ்டாகிராம் குயின் என்று செல்லமாக அழைத்து வருகின்றனர்.

ஷிவானி நாராயணன்
விஜய் டிவியில் பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்தவர் ஷிவானி. அந்த சீரியல் மூலம் ஏராளமாக ரசிகர்களை பெற்ற அவர், சரவணன் மீனாட்சி, ராஜா ராணி சீசன் 1, இரட்டை ரோஜா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார். ஷிவானி சீரியலில் பிரபலமானதை விட இன்ஸ்கிராமில், போட்டோ வீடியோவை போட்டு இணையத்தை தெறிக்கவிட்டார்.

வெளியேறினார்
சோஷியல் மீடியாவில் கிடைத்த வரவேற்பால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போன ஷிவானி நாராயணன், அங்கு பாலாவுக்கு எடுபுடிவேலைகளை செய்து சர்ச்சையில் சிக்கினார். வீட்டிற்கு மாஸ் என்ட்ரி கொடுத்த ஷிவானியின் அம்மாவின் மிரட்டலுக்கு பிறகே விளையாட்டில் கவனம் செலுத்தினார். இருந்தாலும் பெரிதாக பெரிதாக எதுவும் சாதிக்காமல் எலிமினேட்டாகி பாதியிலே வெளியேறினார்.

பம்பர் படத்தில்
அடுத்தடுத்து படங்களில் கமிட்டான ஷிவானி, விக்ரம், வீட்ல விசேஷம் போன்ற படங்களில் நடித்தார். விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி மனைவியாக ஷிவானி நடித்து இருந்தார். தற்போது இயக்குனர் எம்.செல்வகுமார் இயக்கத்தில் நடிகர் வெற்றி ஹீரோவாக நடிக்கும் பம்பர் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தில் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியாகி உள்ளது.

பாவம் சிங்கிள்ஸ்
4 மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம் என்பது போல, டானு 4 மணிக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ அல்லது வீடியோவை அப்லோடு செய்யும் ஷிவானி கடந்த சில தினங்களாக எந்த போட்டோவையும் பதிவு செய்யாததால் ஏங்கிப்போன ரசிகர்கள் அவரின் பழைய போட்டோவை பார்த்து வர்ணித்து கவிதை பாடி வருகின்றனர். ஏம்மா.. ஷிவானி எதாவது போட்டோவை போடுமா பாவம் சிங்கிள்ஸ்.


Click it and Unblock the Notifications











