வா தலைவா... போஸ்டரில் அதகளப்படுத்தும் விஜய் ரசிகர்கள்
சென்னை : நடிகர் விஜய் தனது 47 வது பிறந்தநாளை நாளை கொண்டாட உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே சோஷியல் மீடியாவில் விஜய் தான் டிரெண்டிங் டாப்பிக்காக இருந்து வருகிறார்.
இதற்கு காரணம் அவரது புதிய படம் மட்டுமல்ல, ரசிகர்களும் தான். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடன் பணியாற்றி பிரபலங்கள் ட்விட்டர் டாக்கில் கலந்துரையாடும் நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

இன்று தளபதி 65 ஃபஸ்ட்லுக்
இதற்கிடையில் விஜய் நடிக்கும் புதிய படமாக தளபதி 65 படத்தின் ஃபஸ்ட்லுக்கை இன்று வெளியிட உள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இந்த படம் பற்றிய புதிய ஹாட் அப்டேட் ஏதாவது நாளை வெளியிடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

வித்தியாசமான போஸ்டர்கள்
சினிமா வட்டாரத்தில் தான் இப்படி என்றால், விஜய் ரசிகர்களோ அவரின் பிறந்த நாளை கொண்டாட தமிழகத்தின் பல பகுதிகளில் வித்தியாசமாக யோசித்து, அதிரடி வசனங்களுடன் ஒட்டி உள்ள போஸ்டர்கள் திரையுலகை மட்டுமல்ல, அரசியல் களத்தையும் அதிர வைத்துள்ளது.

ஸ்டாலின் விஜய்யை கூப்பிட்டாரா
சமீபத்தில் திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் விஜய்யை அரசியலுக்கு வர சொல்லி வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் தமிழக முதல்வர் ஸ்டாலின், செங்கோலை விஜய்யிடம் கொடுத்து, தம்பி வா...தலைமை ஏற்க வா என அரசியலுக்கு வரச் சொல்லி அழைப்பது போன்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.

தடுப்பூசில கூடவா விஜய்
இந்த போஸ்டர்கள் சோஷியல் மீடியாக்களில் பகிரப்பட்டு, வைரலாக்கப்பட்டு வருகின்றன. இது ஓய்வதற்குள் அடுத்தபடியாக கொரோனா தடுப்பூசியில் விஜய் ஃபோட்டோவை வைத்து, தமிழக மக்களை காக்கும் ஒரே தடுப்பூசி என குறிப்பிட்டு சில இடங்களில் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.

டிரெண்டிங்கில் விஜய்
இந்த போஸ்டர்கள் ஒரு புறம், விஜய்யின் தளபதி 65 பட ஃபஸ்ட்லுக் ஒரு புறம் என சோஷியல் மீடியா முழுவதும் விஜய் பற்றிய பேச்சாக தான் உள்ளது. ட்விட்டரிலும் தளபதி 65 ஃபஸ்ட்லுக் டே என்ற ஹாஷ்டாக் உருவாக்கப்பட்டு, டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











