ப்ளீஸ்.. அவரு படத்துல மட்டும் நடிக்கவே நடிக்காதீங்க.. தீபிகா படுகோனேவுக்கு ரசிகர்கள் கோரிக்கை!

மும்பை: நடிகை தீபிகா படுகோனே ஒரு குறிப்பிட்ட இயக்குநரின் படத்தில் மட்டும் நடிக்கவே கூடாது என அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியில் ஓம் ஷாந்தி ஒம் படத்தின் மூலம் அறிமுகமானவர் தீபிகா படுகோன். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இதைத்தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுல் ஒருவராக வலம் வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பிறகும் தொடர்ந்து சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார் தீபிகா படுகோன்.

போட்டோக்கள் வைரல்

போட்டோக்கள் வைரல்

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலிவுட் இயக்குநர் லுவ் ராஜனை தீபிகா படுகோன் சந்தித்ததாக தகவல் வெளியானது. இதுதொடர்பான போட்டோக்களும் சமூக வலைதளத்தில் வைரலானது.

பாலியல் புகார்கள்

பாலியல் புகார்கள்

இதனை பார்த்த ரசிகர்கள் அவர் எங்களின் தீபிகா அல்ல என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்தனர். காரணம் இயக்குநர் லுவ் ராஜன் மீது பல்வேறு பாலியல் புகார்கள் உள்ளன.

ரசிகர்கள் விரும்பவில்லை

ரசிகர்கள் விரும்பவில்லை

மீட்டூ புகாரில் அடிக்கடி சிக்கியவர் இயக்குநர் லுவ் ராஜன். பெண்களை கிள்ளு கீரையாக பயன்படுத்திய ஒருவரின் படத்தின் தீபிகா படுகோன் நடிப்பதை அவரது ரசிகர்கள் விரும்பவில்லை.

ரசிகர்கள் கோரிக்கை

ரசிகர்கள் கோரிக்கை

இதனை முன்னிட்டே நீங்கள் பார்த்தது எங்களின் தீபிகா அல்ல என்று ட்ரென்ட்டாக்கிய ரசிகர்கள் அவரது படங்களில் நடிக்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர். தீபிகா படுகோன் என்ன முடிவு எடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X