ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா டாக்டர்? கொதிக்கும் ரசிகர்கள்.. தெறிக்கும் டிவிட்டர்! #DoctorOnlyInTheatres
சென்னை: சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் ஓடிடியில் ரிலீஸ் என தகவல் பரவியதை தொடர்ந்து தியேட்டரில் ரிலீஸ் செய்ய வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் டாக்டர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏற்கனவே கடந்த மார்ச் மாதமே ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட இப்படம் தேர்தல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இதனால் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி எழுந்தது. இதனிடையே டாக்டர் படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என்று தகவல் வெளியானது.
இதனை ஏற்றுக் கொள்ளாத ரசிகர்கள் டாக்டர் படத்தை தியேட்டரில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் #DoctorOnlyInTheatres என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.
இதனிடையே டாக்டர் படத்தை வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திரத் தினத்தன்று நேரடியாக தியேட்டரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் படத்தின் ரிலீஸ் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











