மாஸ் BGM போட்டு நடந்து வந்தா தியேட்டரே அதிரும்.. தல தோனியை சினிமாவில் நடிக்கச் சொல்லும் ரசிகர்கள்!

சென்னை: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தனக்கான சாம்ராஜியத்தை உருவாக்கியவர் உலகக் கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், இந்தியாவில் நடைபெறும் கிளப் கிரிக்கெட் போட்டிகளான, ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு 5 கோப்பைகளை வென்று கொடுத்த தோனி மீது தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் வெறியர்களாக உள்ளார்கள். இந்நிலையில் தோனியை சினிமாவில் நடிக்கச் சொல்லி அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

மகேந்திர சிங் தோனி வேறு எந்த ஐபிஎல் அணியில் விளையாடினாலும் அவரை இந்த அளவுக்கு அந்த அணியின் ரசிகர்கள் கொண்டாடி இருப்பார்களா எனத் தெரியாது எனக் கூறும் அளவுக்கு, தோனி மீது ரசிகர்கள் பெரும் அன்பைப் பொழிந்து வருகிறார்கள். ஐபிஎல் தொடங்கிய காலத்தில் இருந்து அதாவது 2008 ஆம் ஆண்டில் இருந்து சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். இடையில் சென்னை அணிக்கு தடை விதித்த போது கூட, சென்னை அணி வீரர்கள் மீது, ரசிகர்கள் மீது பெரும் நம்பிக்கை கொண்டிருந்தார்.

MS Dhoni CSK IPL 2025 2025

தமிழ்நாட்டில் சினிமா பிரபலங்கள் தோனியின் தீவிர ரசிகர்களாக உள்ளார்கள். மேலும் சினிமா பிரபலங்களின் ரசிகர்களாக பிரிந்து நிற்கும் ரசிகர்கள், தோனி என்றால் உடனே ஒன்றுகூடி விடுவார்கள். தோனிதான் வாழ்க்கையே என நினைத்துக் கொண்டு அவரது அறிவுரைகளை பின்பற்றி வருகிறவர்கள் லட்சக்கணக்கில் உள்ளார்கள். சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி ஸ்டெப் டவுன் ஆகி அந்த கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கொடுத்தபோது, ரசிகர்கள் தோனி மீதான அன்பை மேலும் அதிகரித்தார்கள்.

சி.எஸ்.கே: தோனியின் சிக்ஸருக்காக மைதானமே அதிரும் அளவுக்கு ஆரவாரம் செய்யும் ரசிகர்கள், உலகத்தின் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் கிளம்பி வந்துவிடுகிறார்கள். அவர்களை தல தோனியின் ரசிகர்கள் எனக் கூறுவதை விட தல தோனியின் வெறியர்கள் எனக் கூறலாம். இப்படி இருக்கும்போது, தோனி வரும் மார்ச் மாதம் 23ஆம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ள, சென்னை வந்துள்ளார். வழக்கமாகவே ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னால் சென்னைக்கு வந்து தீவிர பயிற்சியை மேற்கொள்பவர் தோனி.

சினிமா: அதன் அடிப்படையில் இந்த முறையும் அவர் வந்துள்ளார். அவர் வந்ததை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வீடியோவாக வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவுக்கு அஜித் குமார் நடிப்பில் உருவான விடாமுயற்சி படத்தில் அனிருத் இசையில் இடம்பெற்றுள்ள, ரத்தம் ஒரு சொட்டு பாடலை பின்னணி இசையாக சேர்த்துள்ளார்கள். செம மாஸாக இருக்கும் இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் தல தோனி சினிமாவுக்கு நடிக்க வந்தா சூப்பரா இருக்குமே, மாஸா ஒரு பி.ஜி.எம் போட்டு தல தோனி நடந்து வந்தா போதுமே" என சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்து வருகிறார்கள். தல தோனி ஏற்கனவே தமிழில் எல்.ஜி.எம் படத்தை தயாரித்துள்ளார். இந்நிலையில் அவரை படத்தில் ரசிகர்கள் அழைப்பதால் அவரது முடிவுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டு உள்ளார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X