சிம்பு சீக்கிரமே அஷ்வத் கூட படம் பண்ணுங்க.. டிராகன் அலப்பறை.. காட் ஆஃப் லவ்வுக்கு வெயிட்டிங்!
சென்னை: பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மிஷ்கின், கெளதம் மேனன், கே.எஸ். ரவிக்குமார், ஜார்ஜ் மரியம் உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியான டிராகன் படம் முதல் நாளே நல்ல வசூல் வேட்டை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் கிடைத்துள்ள பாசிட்டிவ் விமர்சனம் காரணமாக ஈவ்னிங் மற்றும் நைட் ஷோ எல்லாம் டிக்கெட் புக்கிங் தீயாக பறக்கிறதாம்.
டிராகன் படத்தின் வெற்றிக்கு மொத்த கிரெடிட்ஸும் அந்த படத்தை ரசிகர்கள் என்டர்டெயின் ஆகவும் சமூக கருத்தை மொக்கை போடாமல் ஜாலியாக கொடுத்த இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவையே சேரும் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

டிராகன் படத்தை பார்த்து மிரண்டுப்போன சிம்பு ரசிகர்கள் தலைவா சீக்கிரம் அஷ்வத் கூடவே அடுத்த படம் பண்ணுங்க என்றும் சிம்புவின் 51வது படமான காட் ஆஃப் லவ் திரைப்படம் சீக்கிரம் வர வழியிருக்கா என கேட்டு வருகின்றனர்.
சிம்பு பாடினாலே ஹிட்: மாநாடு படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல படங்கள் பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கவில்லை. அதன் பிறகு சிம்பு நடிப்பில் இன்னமும் அடுத்த படம் ஆரம்பிக்கவில்லை. கமலுடன் இணைந்து அவர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் தான் ரசிகர்களுக்கு இந்த ஆண்டு பெரிய ட்ரீட்டாக இருக்கப் போகிறது. இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட யங்ஸ்டர்களுக்கு பாட்டுப் பாடி ஹிட் கொடுத்து வருகிறார் சிம்பு.

சரவெடி லைன் அப்: தக் லைஃப் படத்தைத் தொடர்ந்து சிம்பு அடுத்ததாக பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்கப் போவதாக அறிவித்துள்ளார். அதன் பின்னர் 50வது படத்தை தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளார். 51வது படத்தை ஓ மை கடவுளே மற்றும் டிராகன் படங்களை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து இயக்கப் போகிறார். கூடிய சீக்கிரமே சிம்பு கோலிவுட்டில் தான் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கப் போகிறார் என அவரது ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அஷ்வத்துடன் முதல்ல பண்ணுங்க: டிராகன் படத்தை இன்று திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், பார்க்கிங் பட இயக்குநருடன் இணைவது இருக்கட்டும். முதலில் அஷ்வத் மாரிமுத்துவுடன் இணைந்து காட் ஆஃப் லவ் படத்தை பண்ணுங்க தலைவா என சிம்புவுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். சிம்பு பக்காவாக இயக்குநர்களை தேர்வு செய்திருக்கிறார். இந்த முறை மிஸ்ஸே ஆகாது. அடுத்து வரப்போகும் அனைத்து படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெறுவது உறுதி என்றும் கோலிவுட்டின் புதிய பாக்ஸ் ஆபீஸ் கிங்காக சிம்பு மாறுவார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

காட் ஆஃப் லவ்: ஓ மை கடவுளே படத்தில் அசோக் செல்வனுக்கு உதவும் கடவுளாக விஜய் சேதுபதி நடித்திருப்பார். டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு டைம் மெஷினே இல்லாமல் மீண்டும் கல்லூரியில் படிக்கும் செகண்ட் சான்ஸ் கிடைக்கும். இந்நிலையில், காட் ஆஃப் லவ் படத்தில் மன்மதன் சிம்பு பூமிக்கு வந்து காதலில் விழும் கதையாக இருக்குமா? என ரசிகர்கள் இப்போதே அந்த படம் எப்படி இருக்கும் என எதிர்பார்ப்புகளை எகிற விட தொடங்கி விட்டனர். அடுத்த வருடத்துக்குள் இந்த காம்போ இணைந்து படம் வெளியானால் நல்லா இருக்கும்.


Click it and Unblock the Notifications











