கில்லி பேனர் கிழிப்பு.. அஜித் ரசிகர்கள் அட்டகாசம்.. தியேட்டருக்குள் சரவெடி.. எங்க போய் முடியுமோ?

சென்னை: நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு தீனா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக கில்லி திரைப்படம் திரையரங்குகளில் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்து ஓடிவந்த நிலையில், தற்போது தீனா ரீ ரிலீஸை முன்னிட்டு தியேட்டருக்கு வந்த அஜித் ரசிகர்கள் கில்லி பேனரை கிழிக்கும் சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.

மேலும், ரீ ரிலீஸ் கொண்டாட்டம் என்னன்னு நாங்க காட்டுறோம் பாருங்கடா என்று போட்டா போட்டி போட்டு ரோகினி தியேட்டருக்குள் பட்டாசு வெடித்து அட்டகாசம் செய்துள்ளனர் அஜித் ரசிகர்கள்.

Fans ripped Vijay s Ghilli banners at theaters and celebrated Ajith birthday in a wrong way

கில்லி படம் மீண்டும் வெளியாகி கொண்டாட்டங்கள் நடந்தாலும் எந்த ஒரு அசம்பாவிதம் சம்பவங்களும் இதுவரை நடைபெறவில்லை. ஆனால் அஜித் ரசிகர்கள் எல்லை மீறி செல்வதாக குற்றச்சாட்டுகள் சோஷியல் மீடியாவில் எழுந்துள்ளன.

அஜித் பிறந்தநாள்: நடிகர் அஜித்குமாரின் 53-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் வெளியான தீனா திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அஜித் ரசிகர்கள் எப்படியாவது கில்லி ரீ ரிலீஸ் வசூலை முந்த வேண்டும் என்கிற முயற்சியில் முதல் நாளில் தியேட்டரில் அலப்பறை கிளப்பி வருகின்றனர்.

தியேட்டருக்குள் பட்டாசு: சென்னையில் உள்ள ரோகினி தியேட்டரில் அஜித் குமாரின் தீனா திரைப்படம் வெளியான நிலையில், அங்கு வந்த அஜித் ரசிகர்கள் " வத்திக்குச்சி பத்திக்காதுடா" பாடலைப் பார்த்துக்கொண்டே தியேட்டரில் பட்டாசு வெடித்து கொண்டாடிய காட்சிகள் பகீரை கிளப்பியுள்ளன. 100 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே வந்து தியேட்டரை நாசம் செய்து வருகின்றனர் அஜித் ரசிகர்கள் என்கிற குற்றச்சாட்டை பலரும் எழுப்பி வருகின்றனர்.

கில்லி பேனர் கிழிப்பு: தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா நடிப்பில் வெளியான கில்லி படம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு கடந்த இரண்டு வாரங்களாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில், தீனா படம் இன்று மறுபடியும் இது செய்யப்பட்டுள்ள நிலையில் அந்தப் படத்தை பார்க்க வந்த அஜித் ரசிகர்கள் சென்னையில் உள்ள காசி தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த விஜயின் கில்லி படத்தின் பேனரை கிழிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

துணிவு கொண்டாட்டத்தில் மரணம்: கடந்தாண்டு பொங்கலுக்கு அஜித் குமார் நடித்த துணிவு படத்தின் முதல் நாள் கொண்டாட்டத்தின் போது ரசிகர் ஒருவர் வாகனத்தின் மீது ஏறி நின்று நடனமாடி வந்த நிலையில் கீழே விழுந்து மரணம் அடைந்தார். அஜித் ரசிகர்கள் தற்போது தியேட்டரில் கில்லி படத்தின் போஸ்டர்களை கிழித்து வரும் நிலையில் இருதரப்புக்கும் மத்தியில் சண்டை வெடித்தால் என்ன விளைவு நடக்குமோ? என்கிற அச்சமும் எழுந்து வருகிறது. படத்தை படமாக பார்க்காமல் ரீ ரிலீஸ் கொண்டாட்டத்திலும் அஜித் ரசிகர்கள் பிரச்சனையை கிளப்பி வருவதாக விஜய் ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

பிறந்தநாள் கொண்டாட்டம்: நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு ஷாலினி பெரிய விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கூடிய விரைவில் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X