அனைத்தையும் பறித்துவிட்டாரா ஆர்த்தி?.. நாடோடியான ஜெயம் ரவி.. பணம் எல்லாம் எங்கே?.. ரசிகர்கள் ஷாக்

சென்னை: ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்தபோது முதலில் ஆர்த்தி மீதுதான் பலரும் குற்றச்சாட்டை முன்வைத்தார்கள். ஆனால் ஆர்த்தி விளக்கமளித்த பிறகு அந்தக் குற்றச்சாட்டுக்கள் அப்படியே ரவி பக்கம் திரும்பின. மேலும் கெனிஷா என்ற பெண்ணுடன் ரவிக்கு ஏற்பட்ட தொடர்புதான் காரணம் என்றும் சொன்னார்கள். ஆனால் தனக்கும் அந்தப் பெண்ணுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று கூறினார் ரவி. இந்தச் சூழலில் அவர் அளித்த பேட்டியில் பேசிய சில விஷயங்கள் உச்சக்கட்ட ஷாக்கை ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது.

ஜெயம் ரவிக்கென்று ரசிகர்கள் பெரிதாக இல்லாமல் இருந்தாலும் அவரை வெறுப்பவர்கள் யாருமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எந்த கிசுகிசுவிலும் சிக்காமல் சக ஹீரோக்களுடன் படு சகஜமாக பேசி பழகக்கூடியவர். அதனை விக்ரம், கார்த்தி, ஜீவா உள்ளிட்டோர் பல மேடைகளில் சொல்லியிருக்கின்றனர். அப்படி க்ளீன் பாய் இமேஜில் இருந்த ரவியை சுற்றி கடந்த சில நாட்கள் சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. அதற்கு காரணம் அவர் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தது.

jayam ravi aarthi kollywood

இன்னொரு பெண்ணுடன் தொடர்பு: அவரது விவாகரத்து முடிவைவிடவும் அதிகம் பேசுபொருளானது என்னவென்றால்; அவருக்கும் கெனிஷா என்ற பாடகிக்கும் இடையே உறவு இருப்பதாகவும்; இருவரும் கோவாவில் இருக்கிறார்கள் என்ற விஷயம்தான்.இதனைக் கேள்விப்பட்ட பலரும் என்னது ஜெயம் ரவி பெண் விஷயத்தில் கிசுகிசுக்கப்படுகிறாரா என்றுதான் ஆச்சரியப்பட்டார்கள். அதுமட்டுமின்றி ரவி எடுத்த விவாகரத்து முடிவு தனக்கு தெரியாது என்றும் ஆர்த்தி கூறியது; ரவி மீது கொஞ்சம் அதிருப்தியை அதிகப்படுத்தியது.

ரவியின் விளக்கம்: ஆனால் வழக்கமான நடிகர்கள் போல் இல்லாமல் தன்னோடு இன்னொரு பெண்ணை இணைத்து பேச ஆரம்பித்ததும் அதுதொடர்பாக விளக்கங்களை கொடுத்துவிட்டார் ரவி. அதாவது தனக்கும், கெனிஷாவுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. நாங்கள் இணைந்து ஒரு ஆன்மீக மையத்தை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம். தேவையில்லாமல் அந்தப் பெண்ணை இதில் இணைக்க வேண்டாம்; வாழு வாழ விடு என்று சொல்லிவிட்டு சென்றார் அவர்

ஆர்த்திதான் காரணம்?: இதற்கிடையே ரவியை ஆர்த்தி ரொம்பவே டார்ச்சர் செய்துவிட்டார். அதை பொறுக்க முடியாமல்தான் ரவி இப்படியொரு முடிவை எடுத்தார் என்றும் ஒரு தரப்பு கூறிவருகிறது. எது எப்படியோ எதற்காக விவாகரத்து; யார் காரணம் என்பதெல்லாம் சம்பந்தப்பட்ட இருவருக்கு மட்டும்தான் தெரியும். ஆனால் கெனிஷா குறித்து விளக்கமளித்த ஜெயம் ரவி; அதற்கு பிறகு தனியார் ஊடகம் ஒன்றுக்கு தனது விவாகரத்து தொடர்பாக முதன்முறையாக மனம் திறந்து பேசினார்.

ஓபன் டாக்: அந்தப் பேட்டியில் அவர், ஆர்த்தியிடம் தனக்கு விவாகரத்துதான் வேண்டும் என்று தெளிவாகவே சொல்லிவிட்டேன். அது அவர்களது வீட்டுக்கும் தெரியும். ஒருகட்டத்தில் எனக்கு மூச்சு முட்டியது. வீட்டை விட்டு வெளியேறினேன். அப்போது என்னிடம் எதுவுமே இல்லை. ஒரு கார் மட்டும்தான் இருந்தது. இப்போது நான் ஒரு நாடோடி என்று கூறியிருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பல கேள்விகளை சமூக வலைதளங்களில் எழுப்பிவருகின்றனர்.

அனைத்தையும் பறித்தாரா ஆர்த்தி?: அதாவது தான் வீட்டை விட்டு வெளியேறியபோது தன்னிடம் எதுவுமே இல்லை. ஒரு கார் மட்டும்தான் இருந்தது என்கிறார் ஜெயம் ரவி. அவர் இதுவரை 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். கண்டிப்பாக கோடிக்கணக்கில்தான் ஒரு படத்துக்கு சம்பளம் வாங்குவார். எனில் இதுவரை அவர் சம்பாதித்த பணம் எல்லாம் எங்கே. ஒருவேளை அனைத்தையும் ஆர்த்தி பறித்துவிட்டாரா. ரவியிடம் இப்போது பணமே இல்லையா? முக்கியமாக ரவியை ஆர்த்தியும், ஆர்த்தியின் தாயும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் என்றெல்லாம் கிசுகிசுக்கள் பரவின. ரவியின் இந்தப் பேட்டியை வைத்து பார்க்கையில் அந்த கிசுகிசுக்கள் அனைத்தும் உண்மைதானோ. ரவியின் சம்பள தொகை எல்லாம் ஆர்த்தியிடமும், அவரது தாயிடமும் சென்று சேர்ந்ததோ என்று நினைக்க தோன்றுகிறது என சரமாரியாக கமெண்ட்ஸ்களை பறக்கவிடுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X