twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அற்புதமான குடும்ப சித்திரங்களை கொடுத்தவர்கள் நீங்கள்.. இப்படி சண்டை போடுவது நல்லாவா இருக்கு?

    பல அற்புதமான குடும்ப சித்திரங்களை கொடுத்த இயக்குநர்கள் விசுவும் பாக்யராஜும் சண்டைபோட்டு கொள்வது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    |

    Recommended Video

    பாக்யராஜால் குற்றம் சாற்றப்பட்ட விசு அமெரிக்காவில் இருந்து அளித்த பதில்- வீடியோ

    சென்னை: பல அற்புதமான குடும்ப சித்திரங்களை கொடுத்த இயக்குநர்கள் விசுவும் பாக்யராஜும் சண்டைபோட்டு கொள்வது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் அறக்கட்டளை என்ற அமைப்பை ஆரம்பித்து ரூ.37 லட்சம் மோசடி செய்யப்பட்டு உள்ளது என மூத்த இயக்குநர் விசு மீது இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து தன் மீதான புகார் குறித்து விசு விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்காவில் சிகிச்சைப் பெற்றுவரும் விசு, அங்கிருந்தபடியே பாக்யராஜின் புகாருக்கு விளக்கம் அளித்துள்ளார்.

    விசு உருக்கம்

    விசு உருக்கம்

    தான் எந்த கையாடலும் செய்யவில்லை என்றும், பணம் பத்திரமாக உள்ளது என்றும் கூறியுள்ள விசு, பாக்யராஜின் புகார் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் பாக்யராஜின் புகார் மனிதாபிமானம் செத்து போய்விட்டது என்பதை காட்டுவதாக உள்ளது என உருக்கமாக கூறியுள்ளார் விசு.

    சம்சாரம் அது மின்சாரம்

    சம்சாரம் அது மின்சாரம்

    விசு இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் ஆவார். விசு பல குடும்ப சித்திரங்களை கொடுத்துள்ளார். இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் பெரும்பாலான இந்திய மொழிகளில் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது.

    குடும்ப பாங்கான

    குடும்ப பாங்கான

    இத்திரைப்படம் 1986-ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான பிலிம் பேர் விருதை பெற்றுள்ளது. தமிழின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் இயக்குனரானார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் சமூக, குடும்ப பாங்கானவையாகும்.

    விசுவின் இயக்கத்தில்

    விசுவின் இயக்கத்தில்

    திருமதி ஒரு வெகுமதி, பெண்மணி அவள் கண்மணி, வரவு நல்ல உறவு உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

    பாக்யராஜ் புகார்

    பாக்யராஜ் புகார்

    விசுவின் படமா குடும்பத்துடன் பார்க்கலாம் என்ற உத்தரவாதத்தை பெற்றவர் விசு. இந்நிலையில் அவர் மீது மற்றொரு இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் மோசடி புகார் கூறியிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உதவி இயக்குனர்

    உதவி இயக்குனர்

    பாக்யராஜ் தமிழ்த் திரையுலகில், நடிகர், வசன எழுத்தாளர், திரைக்கதை அமைப்பாளர், இயக்குனர், சிறப்பு வேடமேற்கும் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பத்திரிகையாளர் எனப் பன்முகம் கொண்ட ஒரு கலைஞர். இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக, 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களில் பணிபுரிந்துள்ளார்.

    சிறந்த படங்கள்

    சிறந்த படங்கள்

    அந்த ஏழு நாட்கள், முந்தானை முடிச்சு, சொக்கத்தங்கம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். பிறரின் இயக்கத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

    ரசிகர்கள் சோகம்

    ரசிகர்கள் சோகம்

    சிறந்த வசனகர்த்தாக்களான இவர்களின் வசனங்கள் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தமிழ் சினிமாவின் இரு பெரும் துருவங்களான விசுவும் பாக்யராஜும் சண்டைபோட்டுக்கொள்வது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ரசிகர்கள் வேதனை

    ரசிகர்கள் வேதனை

    இவர்கள் இருவரின் ஒவ்வொரு வசனமும் ஒரு வாழ்க்கை அனுபவம். தங்களின் கலைத்திறனால் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முயன்றவர்கள் இப்படி சண்டைபோட்டுக்கொள்வது நல்லதா என வேதனைபடுகின்றனர் ரசிகர்கள்.

    English summary
    Director Visu responded Bhakyaraj accussation on money fradulent. He said there is no more humanity it seems.Fans sad of fight between Visu and Bhakyaraj.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X