குட் பேட் அக்லி முதல் சிங்கிள்.. விஜய் மட்டுமில்லாமல் தனுஷையும் வம்பிழுத்தாரா அஜித்?.. புது பஞ்சாயத்து

சென்னை: அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் சூழலில் படத்தின் முதல் சிங்கிளான ஓஜி சம்பவம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது. அஜித் ரசிகர்களுக்கு இந்தப் பாடல் ட்ரீட்டாக அமைந்தாலும் பொதுவான ரசிகர்களுக்கு ஓரளவுதான் திருப்தியை கொடுத்திருக்கிறது. அதேசமயம் பாடல் வரிகளில் விஜய் மற்றும் தனுஷை வம்பிழுத்ததாகவும் ஒரு தரப்பினர் தொடர்ந்து கூறிவருகிறார்கள்.

அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் அவரது ரசிகர்களை ரொம்பவே சோதித்துவிட்டது. தங்கள் ஏகேவுக்குரிய எந்த மாஸ் சீனும் படத்தில் இல்லையே என்று அவர்கள் ஓபனாகவே பேச ஆரம்பித்தார்கள். அதுமட்டுமின்றி மகிழ் திருமேனியை அவரது கதையை செய்ய விட்டிருந்தாலே படம் சம்பவம் செய்திருக்கும்; தேவையில்லாமல் அஜித் உள்ளே புகுந்து கெடுத்துவிட்டாரோ என்றும் ரசிகர்களில் ஒருதரப்பினர் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாக பலத்த அடியைத்தான் வாங்கியது.

அஜித்தின் குட் பேட் அக்லி: விடாமுயற்சி படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்க கமிட்டானார். அதனைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம்தான் பட்டார்கள். ஏனெனில் கடந்த பல வருடங்களாக அஜித் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிப்பதில்லை. ஆனால் இப்போது அவர் அந்த முடிவு எடுத்ததற்கு கார் ரேஸ்தான் காரணம். தனக்கு இருந்த கமிட்மெண்ட்டுகளை முடித்துவிட்டு கார் ரேஸுக்கு அவர் சென்றார்.

Fans say Ajith attacks Dhanush in the first single of Good Bad Ugly

ஃபேன் பாய் சம்பவம்: அஜித்தின் தீவிர ரசிகர் ஆதிக் ரவிச்சந்திரன். அதன் காரணமாக குட் பேட் அக்லி படத்தை ஒரு ஃபேன் பாய் சம்பவமாக செய்வார் என்று ஏகே ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். அதனை பூர்த்தி செய்யும் விதமாக படத்தின் டீசர் அமைந்தது. டீசரில் அஜித்தின் பழைய படங்களின் ரெஃபரென்ஸ்களை வைத்து சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார். இந்தப் படத்தில் அஜித்துடன் திரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் வெளிநாடுகளில்தான் நடைபெற்றது.

Take a Poll

ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ்: முதலில் குட் பேட் அக்லி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் பொங்கலுக்கு என்று அறிவிக்கப்பட்டதன் காரணமாக இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. அதேசமயம் விடாமுயற்சியும் பொங்கலுக்கு ரிலீஸாகவில்லை என்பது தனிக்கதை. இப்படிப்பட்ட சூழலில் படமானது ஏப்ரல் பத்தாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்துக்காக ரசிகர்கள் உச்சக்கட்ட ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.

Fans say Ajith attacks Dhanush in the first single of Good Bad Ugly

ஓஜி சம்பவம்: படத்தின் முதல் சிங்கிளான ஓஜி சம்பவம் பாடல் நேற்று வெளியானது. அதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநரான விஷ்ணு எடவன் எழுத, ஜிவி பிரகாஷ், ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடல் குறித்து கடந்த சில நாட்களாகவே ஓவர் ஹைப் ஏற்றி வைத்திருந்தார் ஜிவி. ஆனால் இந்தப் பாடல் அஜித்தின் ரசிகர்களுக்கு மட்டும்தான் பிடித்திருக்கிறது. பொதுவான ரசிகர்களை பெரும்பாலும் இந்தப் பாடல் கவரவில்லை என்றே தெரிகிறது. அதேசமயம் இதுவரை 7 மில்லியன் வியூஸ் யூடியூபில் போயிருக்கிறது.

விஜய், தனுஷை வம்பிழுத்தாரா?: இது ஒருபக்கம் இருக்க பாடல் வரிகள் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது. அதாவது துப்பாக்கி, பீரங்கி எல்லாம் ஒன்னா வந்தா ஒத்த ஆளா சமாளிப்பேன் என்ற வரிகள் இடம்பெற்றிருக்கின்றன. அதனைப் பார்த்த ரசிகர்கள் விஜய்யைத்தான் இதில் வம்புக்கு இழுத்திருக்கிறார்கள் என்றனர். இப்போது இன்னொரு வரியை டீகோட் செய்திருக்கிறார்கள். அதாவது, 'எலும்பெல்லாம் அப்பளமா நொறுங்கிடும் டா' என்ற வரியை எடுத்து போட்டு தனுஷின் உருவத்தை கம்பேர் செய்து, இந்த வரியின் மூலம் தனுஷையும் அஜித் வம்பிழுத்திருக்கிறாரே என்று கமெண்ட்ஸை பறக்கவிடுகின்றனர். இதனால் புது பஞ்சாயத்து கூடியிருக்கிறது. முன்னதாக ஏப்ரல் பத்தாம் தேதிதான் இட்லி கடையும் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அநேகமாக அந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்புகள் இருப்பதாகவும் ஒரு தகவல் ஓடும் சூழலில்; இட்லி கடையை மறைமுகமாக குறிப்பிட்டுதான் இந்த வரிகள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X