இதுவரை இல்லாத அளவுக்கு ரொம்ப மோசமாக போகும் பிக் பாஸ்.. காசுக்காக எதையும் செய்யும் கன்டெஸ்டன்ட்ஸ்!
சென்னை: இதுவரை ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்களிலேயே இதுதான் ரொம்ப மோசமான சீசன் என்று பெயர் வாங்கி விட்டது பிக்பாஸ் சீசன் 4.
பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் முதன் முதலாக கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போதே சில பல சர்ச்சைகள் எழுந்தன.
இதனால் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வழக்கு தொடரப்பட்டது. இருப்பினும் வெற்றிகரமாக இந்த ஆண்டு 4வது சீசன் தொடங்கப்பட்டது.

சில வாரங்கள்..
ஜூன் மாதமே தொடங்கப்பட வேண்டிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி, இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில்தான் தொடங்கியது. இருந்த போதும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய சில வாரங்கள் வரை சுவாரசியமாகதான் சென்றது.

கணக்கு போட்டு விளையாட்டு
இதுவரை நடந்து முடிந்த மூன்று சீசன்களையும் பார்த்த ஹவுஸ்மேட்ஸ் செம தரவாக வந்துள்ளனர். இதனால் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வாரம் என பக்காவாய் கணக்குப் போட்டு விளையாடுகின்றனர்.

சலிப்பு தட்டிவிட்டது
எப்போது அழ வேண்டும் எப்போது கத்த வேண்டும் எப்போது கோபப்பட் வேண்டும் என்று பார்த்து பார்த்து விளையாடி வருகின்றனர். இதனால் நிகழ்ச்சி தொடங்கிய சில வாரங்களிலேயே சலிப்பு தட்டிவிட்டது.

தரம் தாழ்ந்து..
கடந்த சீசன்களில் சண்டை சச்சரவுகள், சர்ச்சை பேச்சுகள் என பல சம்பவங்கள் இருந்தன. ஆனால் அந்த சீசன்களில் எந்த இடத்திலும் வயதில் மூத்தவர்களை இந்த சீசனை போல் அவமதிக்கவில்லை. எந்த தருணத்திலும் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போக வில்லை.

கேவலப்படுத்துகின்றனர்..
சுரேஷ் சக்கரவர்த்தி முதல் ஆரி வரை மூத்த போட்டியாளர்கள் சிறு பிள்ளைகளிடம் அசிங்கப்பட்டு நிற்கின்றனர். எதிரிலுள்ளவர்களை கேவலப்படுத்துவது போல் தன்னைத்தானே செருப்பால் அடித்துக் கொள்வது, மைக்கை கழட்டி அடிப்பது கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் எடுத்து அடிப்பது என இருந்து வருகின்றனர்.

கிடைப்பதையெல்லாம் தூக்கியடித்து..
குறிப்பாக பாலாஜி, ரியோ, ரம்யா ஆகியோர் ஆரியிடம் நடந்து கொள்ளும் விதம் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்து வருகிறது. வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் ஒருமையில் பேசுவது கையில் கிடைப்பதையெல்லாம் தூக்கி அடிப்பது என வேற மாதிரி போயிக் கொண்டிருக்கிறது.

பாலாஜிக்கு ரெட்கார்டு
தொடர்ந்து சக போட்டியாளர்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்ளும் பாலாஜிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பினால் அடுத்தடுத்து வரும் போட்டியாளர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஓங்கி ஒலித்து வருகிறது
ஒரு வாரமாய் ஹவுஸ்மேட்ஸ் ஆரியை படுத்தியபாடு ரசிகர்களை ஒரு வழியாக்கிவிட்டது. அதுவும் பாலாஜி ஆரியை டார்ச்சர் பண்ணிய விதம் பார்வையாளர்களுக்கே மன உளைச்சளை ஏற்படுத்தியது. குழந்தைகளும் இந்நிகழ்ச்சியை பார்ப்பதால் பாலாஜியை வெளியேற்ற வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்து வருகிறது.

பணத்துக்காக துணிந்து..
பிக்பாஸில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும். அதற்காக ரேஸில் முன்னிலையில் உள்ள ஒரு போட்டியாளரை கீழே தள்ளவும் வெற்றி பெறவும் சக போட்டியாளர்கள் மனித நேயத்தை மறந்து எதையும் செய்ய துணிந்து விட்டதாக பார்வையாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இப்படியே அனுப்பி விடுங்கள்
சனிக்கிழமை கமல் வருவார் மைக்கை கழட்டி தூக்கியடித்தது தொடர்பாக விசாரிப்பார். இதற்கு முன்பே பல முறை பாலாஜி மைக்கை போடவில்லை என்று வார்னிங் வாங்கிய பாலாஜியை இந்த முறையோடு வெளியேற்றுவார்கள் என எதிர்பார்த்தனர் ரசிகர்கள்.

என்ன ஆண்டவரே?
ஆனால் வழக்கம் போல் பட்டும் படாமல் தட்டியும் தடவியும் கேட்டார் கமல். இதனால் அப்செட்டான ரசிகர்கள், என்ன ஆண்டவரே இப்படி செய்து விட்டீற்கள்? இப்படி இருந்தால் எப்படி உங்களை நம்புவார்கள் என்று கமலையும் சேர்த்து விமர்சித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











