ஆடு ஜீவிதம் அந்த ஒரு நிர்வாணக் காட்சிக்காகவே தேசிய விருது கொடுக்கணும்.. ரசிகர்கள் ரெக்வஸ்ட்!
சென்னை: பாலை வனத்தில் வெளிக்குப் போய் விட்டு தண்ணீரை பிருத்விராஜ் முதல் நாள் பயன்படுத்தியதும் அவருக்கு சவுக்கடி விழும். எவ்வளவு பணம் கொடுத்துத் தெரியுமா தண்ணி வாங்குறேன் என அந்த அரபு முதலாளி அடிப்பார். அதன் பின்னர், எப்படி கழுவுவது என பிருத்விராஜ் கேட்க, அவருக்கு முன்னதாக ஆடு மேய்க்க வந்த முதியவர் மண்ணை பயன்படுத்து என சொல்லும் காட்சிகள் எல்லாம் பார்க்கவே பகீராக இருக்கும்.
அதற்கே தண்ணீர் இல்லை என்றால் குளிப்பது எல்லாம் சாத்தியமே இல்லாத விஷயம். அதனால் தான் பிருத்விராஜ் உடல் கருத்து, சரியான உணவு மற்றும் குடிநீர் இல்லாமல் ஓடாய் தேய்ந்து போகிறது.

ஒரு கட்டத்தில் குடிக்க வைத்திருக்கும் தண்ணீரை பிருத்விராஜ் எடுத்துக் குளிக்க நிர்வாணமாக செல்லும் காட்சிக்காகவே அவருக்கு தேசிய விருது கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் மெய்சிலிர்த்து பிருத்விராஜின் நடிப்பை பாராட்டி வருகின்றனர்.
விக்ரமை மிஞ்சிய பிருத்விராஜ்: இந்தியாவில் உடலை வருத்திக் கொண்டு சினிமாவுக்கு உண்மை சேர்க்க வேண்டும் என நடிக்கும் நடிகர்கள் வெகு சிலர் மட்டுமே. சியான் விக்ரம் ஐ படத்திற்கு எந்தளவுக்கு டெடிகேஷன் செய்திருந்தாரோ அதை விட பல மடங்கு பிருத்விராஜ் ஆடு ஜீவிதம் படத்துக்காக தனது உடம்பைக் கொடுத்து நடித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஆடு ஜீவிதம் படத்தை சியான் விக்ரம் மிஸ் செய்யாமல் நடித்திருந்தால் அவரும் பிருத்விராஜ் அளவுக்கு உழைப்பை கொடுத்திருப்பார் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.
தப்பிக்க நினைத்தால் சுட்டுவிடுவார்கள்: சவுதி அரேபியாவுக்கு ஹெல்பர் வேலைக்காக செல்கிறோம் என சந்தோஷமாக 30 ஆயிரம் ரூபாயை வீட்டை அடமானம் வைத்து புரட்டிக் கொடுத்து விட்டு விமானத்தில் ஏறி சந்தோஷமாக பெரிய எதிர்காலம் பிறக்கும் என நினைத்துச் செல்லும் பிருத்விராஜ் பாலை வனத்தில் ஆடுகளையும் ஒட்டகத்தையும் மேய்க்கும் வேலை என்று தெரிந்ததும் நாடு திரும்ப கெஞ்சி கூத்தாடுவார். அவருக்கு சவுக்கடி தான் அதற்கு பரிசாக கிடைக்கும். அங்கிருந்து ஒருமுறை தப்பித்து விடலாம் என நினைக்கும் போது துப்பாக்கியால் கால் அருகே சுட்டு அந்த அரபு முதலாளி சித்ரவதை செய்யும் காட்சிகள் பதை பதைக்க வைத்து விடும்.

முழு நிர்வாணக் காட்சி: ஒரு கட்டத்தில் அந்த இடத்தில் இருந்து தப்பிக்கப் போகிறோம் என நினைத்ததும் இதுவரை குடிக்கக் கூட அளந்து தண்ணீர் தரப்பட்டு வந்த இடத்தில், வெளிக்குப் போனால் கூட கழுவ தண்ணீர் தராமல் அழுக்கு மூட்டையாக பல வருடங்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த நஜீப் (பிருத்விராஜ்) தனது உடைகளை அப்படியே கழட்டிப் போட்டு விட்டு குடிக்க வைத்திருந்த தொட்டித் தண்ணீரில் குளிக்கும் காட்சியில் முழு நிர்வாணமாக நடித்து அசத்தியிருக்கிறார். பிளர் கூட செய்யாமல் அந்த காட்சியை சென்சார் போர்டு எப்படி அனுமதித்தது என்கிற கேள்வி எழுந்தாலும், படத்திற்கே அந்த காட்சி வலுவான காட்சி என்பதால் பார்க்கும் அனைவருக்கும் பிருத்விராஜ் இந்த படத்துக்காக ரியல் நஜீப் அடைந்த வலியும் வேதனையும் அடைந்து 90 கிலோவில் இருந்து 60 கிலோவாக தனது எடையை குறைத்து நடித்ததை பார்த்தால் கண்கள் குளமாகி விடும்.
தேசிய விருது கொடுக்கணும்: இந்த ஆண்டு எத்தனை படங்கள் வெளியானாலும், பிருத்விராஜின் இந்த இணையற்ற நடிப்புக்காக அவருக்கு தேசிய விருது கொடுக்க வேண்டும் என மலையாள ரசிகர்கள் மட்டுமின்றி படத்தை பார்த்த அனைவருமே சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்தியா சார்பில் ஆஸ்கருக்கும் இந்த படத்தை அனுப்ப வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











