ஷங்கர், வெற்றிமாறனுக்கு கேட்டுச்சா.. தயாரிப்பாளர் காசை வீணடிக்க மாட்டேன்.. டிராகன் இயக்குநர் பளிச்!

சென்னை: ஓ மை கடவுளே படத்தை இயக்கிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் படத்தை இயக்கியுள்ளார். அடுத்த வாரம் அந்த படம் வெளியாகவுள்ள நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசிய பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

அதுவும் இயக்குநர்கள் ஷங்கர் மற்றும் வெற்றிமாறனை டார்கெட் செய்து அஸ்வத் மாரிமுத்து அவர்களுக்கு அட்வைஸ் கொடுப்பது போல பேசியுள்ளார் என நெட்டிசன்கள் ஏகப்பட்ட ட்வீட்டுகளை போட்டு விமர்சனங்களை அடுக்கி வருகின்றனர்.

Dragon Ashwath Marimuthu Shankar

ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு லவ் டுடே படத்தை போல டிராகன் படமும் வெற்றிப் படமாக அமையுமா என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும் என்கின்றனர்.

ஓ மை கடவுளே பட்ஜெட்: அசோக் செல்வன், ரித்திகா சிங், விஜய் சேதுபதி, வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஃபேண்டஸி காதல் படமாக வெளியான ஓ மை கடவுளே திரைப்படத்தின் பட்ஜெட் வெறும் 3 கோடி ரூபாய் தான் என்றும் அந்த படத்தை எந்தளவுக்கு தரமாக கொடுக்க முடியுமோ அந்தளவுக்கு கொடுத்தேன் என அஸ்வத் மாரிமுத்து தனது பேட்டியில் பேசியுள்ளார். மேலும், வெறும் 35 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் கூறியுள்ளார்.

Dragon Ashwath Marimuthu Shankar

டிராகன் பட்ஜெட்: 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஓ மை கடவுளே படத்தை எடுத்த இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவை நம்பி அர்ச்சனா கல்பாத்தி 37 கோடி பட்ஜெட்டில் டிராகன் படத்தை எடுக்க சம்மதிக்க அந்த முழு பட்ஜெட்டையும் படத்துக்காக தான் செலவிட்டு இருப்பதாக அஸ்வத் மாரிமுத்து கூறியுள்ளார். படத்துக்கு என்ன தேவையோ அதை மட்டுமே எடுப்பேன் என்றும் தேவையில்லாமல் எக்ஸ்ட்ரா சீன்களை எடுத்து தயாரிப்பாளருக்கு தண்டச் செலவு வைக்க மாட்டேன். 2 மணி நேரம் 37 நிமிடம் டிராகன் படம் எடுத்தோம். 2 மணி நேரம் 30 நிமிடங்கள் கடைசியாக படம் ட்ரிம்மாகி வெளியாக காத்திருக்கிறது எனக் கூறியுள்ளார்.

ஷங்கர், வெற்றிமாறன் கேட்டுக்கோங்க: அஸ்வத் மாரிமுத்துவின் இந்த பேச்சைக் கேட்ட ரசிகர்கள் அந்த வீடியோ க்ளிப்பிங்கை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து ஷங்கர், வெற்றிமாறன் எல்லாம் இதை கேட்க வேண்டும் என்றும் ஒரு படம் எடுக்க சொன்னால், 2 படங்களை எடுத்து வைத்து தயாரிப்பாளருக்கு தேவையில்லாத செலவை அதிகரித்து படத்திற்கு வசூல் கூட வராத அளவுக்கு சொதப்பி வருகின்றனர் என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

Dragon Ashwath Marimuthu Shankar

டிராகன் தேறுமா?: பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், கெளதம் மேனன் மற்றும் மிஷ்கினை வைத்து 37 கோடி ரூபாய் பட்ஜெட்டில் அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஏற்கனவே டான் படத்தின் காப்பி என ட்ரோல்கள் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், படம் வெளியான பின்னர் இளைஞர்களை இந்த படம் கவருமா? என்கிற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. டிராகன் டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் 37 கோடி பட்ஜெட் அளவுக்கு எதுவுமே வொர்த்தாக தெரியவில்லையே என்றும் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். படத்தில் பல சர்ப்ரைஸ்கள் இருப்பதாக தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து சொல்லி வரும் நிலையில், படம் வெளியானால் தான் எப்படி இருக்கு என்றும் 70 முதல் 100 கோடி வசூலை ஈட்டுமா? என்பதும் தெரியவரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X