நீங்க ஒரு பர்புள் வெண்ணிலா... டாக்டர் நடிகைக்கு அம்புவிடும் ரசிகர்கள்!

சென்னை : சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகியவர் நடிகை பிரியங்கா மோகன்.

இப்பொழுது டான் மற்றும் சூர்யா 40 ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

அறிமுகமான கொஞ்ச காலத்திலேயே எக்கச்சக்கமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள பிரியங்கா இப்பொழுது பர்புள் வெண்ணிலா போல கொள்ளை அழகில் இருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்பு விடுகின்றனர்.

தமிழில் அறிமுகமாகிறார்

தமிழில் அறிமுகமாகிறார்

கோலமாவு கோகிலா வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கியிருக்கும் திரைப்படம் டாக்டர். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து இருக்க பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். ஏற்கனவே தெலுங்கில் கேங் லீடர் மற்றும் ஸ்ரீ காரம் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

முன்னணி நடிகர்களுடன்

முன்னணி நடிகர்களுடன்

தமிழில் நடித்த முதல் திரைப்படமே இன்னும் வெளியாகாத நிலையில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஒப்பந்தம் ஆகி பட்டையை கிளப்பிக்கொண்டு இருக்கும் பிரியங்காவுக்கு தமிழில் எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர்.

விரைவில் ஓடிடியில்

விரைவில் ஓடிடியில்

காலேஜ் ஸ்டோரி கதை களத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் டான் மற்றும் சூர்யா 40 உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து மேலும் ஒரு முன்னணி நடிகரின் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் டாக்டர் ஓடிடியில் வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பிரியங்காவை காண ரசிகர்கள் பெரும் ஆவலுடன் உள்ளனர்.

ஹார்டின் அம்பு விட்டு

ஹார்டின் அம்பு விட்டு

குறுகிய காலத்திலேயே எக்கச்சக்கமான ரசிகர்களை பெற்றுள்ள இவர் சமூக வலைத்தளத்தில் செம ஆக்டிவாக இருப்பவர். விதவிதமான புகைப்படங்களை அடிக்கடி இணையத்தில் வெளிவிட்டு வரும் பிரியங்கா இப்பொழுது பர்புள் வெண்ணிலா போல பளபளக்கும் உடையில் கீழே வெட்கப்பட்டுக்கொண்டே குனிந்தவாறு பதிவிட்டுள்ள க்யூட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஹார்டின் அம்பு விட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X