Don't Miss!
- Finance
மத்திய பட்ஜெட் 2023: நிறையத் தண்ணீர் குடிங்க.. பட்ஜெட் போர் அடிக்கலாம்..!
- News
இந்தியாவின் 'கனவு பட்ஜெட்' என அழைக்கப்பட்ட 1997-ம் ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்..ஏன் தெரியுமா?
- Technology
BSNL சூப்பர் ரீசார்ஜ்: மாதம் ரூ.184 தான் செலவு 395 நாளுக்கு வேலிடிட்டி.! மாஸ் ஆன பிளான் இதான்.!
- Automobiles
ஃப்ரீனாலும் இந்த 5 ரயில்கள்ல மட்டும் போயிடாதீங்க... போனவங்க எல்லாம் கழுவி கழுவி ஊத்துறாங்க!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மீனாவின் திருமண நாள் பதிவு.. பரிதவிப்பில் குடும்பம்.. கவலையில் ரசிகர்கள்!
சென்னை : நடிகை மீனா தற்போது இக்கட்டான காலகட்டத்தில் பயணித்து வருகிறார்.
Recommended Video
அவரது கணவர் வித்யாசாகர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நுரையீரல் பிரச்சினை காரணமாக உயிரிழந்தார்.
ஈடு செய்ய முடியாத இந்த இழப்பால் தற்போது அந்தக் குடும்பமே செயலிழந்து காணப்படுகிறது.
அந்த
ரெண்டு
டாப்
நடிகருக்கும்
மசாலா
தடவும்
காமெடி
இயக்குநர்..
சிக்கப்
போறது
யாருன்னு
தெரியலையே?

நடிகை மீனா
சிறுவயதிலிருந்து நடித்துவரும் நடிகை மீனா சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரது குழந்தைத்தனமான குரல் மற்றும் செயல்பாடுகள் அனைவரையும் கவர்ந்தன. தென்னிந்திய அளவில் மிகச்சிறப்பான நடிகையாக இவர் காணப்பட்டார். தொடர்ந்து கடந்த 2009ல் வித்யாசாகர் என்ற சாப்ட்வேர் இன்ஜினியரை இவர் திருமணம் செய்துக் கொண்டார்.

தொடர்ந்து நடிப்பு
திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய அழகு மற்றும் உடலை சிறப்பாக பராமரித்து வந்த மீனாவிற்கு தொடர்ந்து சிறப்பான வேடங்கள் அமைந்தன. மலையாளம், தமிழ் என சிறந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து இவர் நடித்து வந்தார். இவர் தற்போதும் இளமையாக காணப்படுவதாக நடிகர் ரஜினி அண்ணாத்த படத்தின் சூட்டிங்கின்போது பாராட்டியிருந்தார்.

விஜய்யுடன் நடித்த நைனிகா
இதனிடையே மீனாவின் மகள் நைனிகாவும் தெறி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். விஜய்யுடன் இவர் நடித்த அந்த கேரக்டர் மிகவும் சிறப்பாக அமைந்தது. விஜய்யின் உண்மையான மகளாகவே இந்தப் படத்தில் அவர் காணப்பட்டார். அந்த அளவிற்கு இருவருக்கும் இடையிலான நடிப்பு சிறப்பாக அமைந்தது.

வித்யாசாகர் மரணம்
கடந்த 2009 ஜூலை 12ம் தேதி மீனா -வித்யாசாகர் திருமணம் நடைபெற்ற நிலையில், இன்னும் சில தினங்களில் இவர்களின் திருமண நாள் வருகிறது. இந்நிலையில் தற்போது வித்யாசாகர் உயிரிழந்துள்ளது மீனா மற்றும் நைனிகாவை மட்டுமில்லாமல் அவர்களது ரசிகர்களையும் கவலையடைய செய்துள்ளது.

திருமண நாள் பகிர்வு
இந்நிலையில் கடந்த ஆண்டில் மீனா தன்னுடைய திருமண நாளின்போது பதிவிட்ட பகிர்வை தற்போது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். அதில் தங்களின் சிறப்பான புகைப்படத்தை பகிர்ந்த மீனா, வானவில் போல தன்னுடைய வாழ்க்கையில் வந்து அதை அழகாக்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

புன்னகையை பரிசளித்த வித்யாசாகர்
தொடர்ந்து வித்யாசாகர் தனக்கு புன்னகையை பரிசளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்னும் சில தினங்களில் இவர்களது திருமண நாள் வருவதையொட்டி மீனா மட்டுமில்லாமல் ரசிகர்களும் மிகுந்த கவலையில் உள்ளனர். நைனிகாவின் நிலையை சொல்லவே வேண்டாம்.