Vadivelu Version: லியோ வெர்ஷனில் வடிவேலு.. யார் செஞ்ச வேலைடா இது!

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் சர்வதேச அளவில் அனைவரையும் கவர காத்திருக்கிறது. படத்தின் ரிலீசுக்காக ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

அடுத்த மாதம் 19ம் தேதி இந்தப் படத்தின் ரிலீஸ் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் படத்தின் தெலுங்கு போஸ்டர் ரிலீசானது.

இந்த போஸ்டரில் நடிகர் விஜய்யின் லியோ கெட்டப் காணப்பட்டது. அவரது டீ-ஷர்ட்ரில் ஆக்ஷனுக்கு விஜய் தயாராவது போல காணப்பட்டது.

Fans shared Vadivelu Version in Vijays Leo movie telugu poster

விஜய்யின் லியோ பட கெட்டப்பில் வடிவேலு: விஜய்யின் லியோ படம் சர்வதேச அளவில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர காத்திருக்கும் சூழலில் ரசிகர்களும் படத்தின் ரிலீசுக்காக மரண மாஸாக வெயிட்டிங். இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த பிப்ரவரி மாதத்தில் துவங்கப்பட்டு 52 நாட்கள் தொடர்ந்து காஷ்மீரில் சூட்டிங் நடத்தப்பட்டது. இந்த சூட்டிங்கின்போது கடுமையான குளிர், நிலநடுக்கம் உள்ளிட்டவற்றை படக்குழுவினர் சந்தித்தனர். இதன் வீடியோக்களும் வெளியிடப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

இந்தப் படத்தின் சூட்டிங்குகள் தொடர்ந்து சென்னை, தலக்கோணம் போன்ற இடங்களிலும் நடத்தப்பட்டு முடிந்துள்ளது. இந்த சூட்டிங் தற்போது நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இன்னும் படத்தின் ரிலீசுக்கு ஒரு மாத காலமே உள்ள நிலையில், படத்தின் பிரமோஷன்கள் தற்போது துவங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற சைமா விருது வழங்கும் விழாவிலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்தப் படத்தின் தெலுங்கு போஸ்டர் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விஜய் இந்த போஸ்டரை வெளியிட்டிருந்தார். இதில் லியோ கெட்டப்பில் விஜய் காணப்பட்டார். மேலும் காஷ்மீரின் பின்னணியில் அவரது டீ-ஷர்ட்டிலும் விஜய் இருந்தார். இந்தப் போஸ்டர் விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் குறைவான நேரத்திலேயே அதிக வியூஸ்களை பெற்று இந்த போஸ்டர் மாஸ் காட்டியது.

Fans shared Vadivelu Version in Vijays Leo movie telugu poster

இந்நிலையில் இந்த போஸ்டரில் நடிகர் வடிவேலுவை பொருத்தி அவரது ரசிகர்கள் மகிழ்ந்துள்ளனர். விஜய் ஸ்டைலான லுக்கில் கீழே குனிந்தபடி இருக்கிறார். அமைதியாக இருந்த போரை தவிர்ப்பது குறித்த வாசகம் அவரது டீ ஷர்ட்டில் காணப்பட்டது. இந்நிலையில் தலையை நிமிர்ந்தபடி தனக்கேயுரிய ஸ்டைலில் புதிய போஸ்டரில் வடிவேலு காணப்படுகிறார். டீ ஷர்ட்டிலும் வடிவேலுவை புகுத்தியுள்ளனர் அவரது ரசிகர்கள்.

இந்த அளவிற்கு விஜய்யுடன் வடிவேலுவை பொருத்திப் பார்ப்பதில் எந்த ரசிகருக்கு இவ்வளவு ஆனந்தமோ தெரியவில்லை. டி ஷர்ட்டிலும் டீடெய்லாக வேலை செய்துள்ளது அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த போஸ்டரும் லட்சத்திற்கும் மேலான வியூஸ்களை பெற்று மாஸ் காட்டியுள்ளது. தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் வடிவேலுவின் நடிப்பில் இந்த மாத இறுதியில் சந்திரமுகி 2 படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X