தைரியமில்லாத கதாநாயகன்.. காசு இல்லாத புரொட்யூசர்.. அஜித் அந்த படத்தை மறுபடியும் பார்க்கணுமாம்!

சென்னை: "அவன் பொருளையே வச்சு அவனையே போடுறது" என சமீப காலமாக வலம் வரும் ஒரு வசனம் தான் நினைவுக்கு வருகிறது. அஜித் குமார் நடிப்பில் வெளியான கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தை மீண்டும் அஜித் குமாரை ஒருமுறை பார்க்கச் சொல்லுங்கள் சுரேஷ் சந்திரா என அஜித் ரசிகர்களே சோஷியல் மீடியாவில் பதிவிட ஆரம்பித்து விட்டனர்.

'தல" என சொல்லிக் கொண்டு திரிந்த ரசிகர்களை அப்படி எல்லாம் சொல்ல வேண்டாம் என அட்வைஸ் பண்ண அஜித் குமார் "கடவுளே அஜித்தே" என கத்த ஆரம்பித்ததும் அதற்கும் நோ மீன்ஸ் நோ என்று சொல்லிவிட்டார்.

Ajith Kumar good bad ugly vidamuyarchi

ரசிகர்களுக்கு பிடித்தமாதிரியான படங்களை கொடுப்பதை விட தனக்கு பிடித்தமான சமூக கருத்துக்கள் கொண்ட படங்களை கொடுக்கவே கடந்த சில ஆண்டுகளாக அஜித் முயற்சித்து வருகிறார் என்று கூறுகின்றனர். ஆனால், அந்த படங்கள் பாக்ஸ் ஆபீஸில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் போவதை விட ரசிகர்களையும் பெரிதாக கவர்வதில்லை என்பது தான் பலரது குற்றச்சாட்டுகளாக மாறியுள்ளது.

அஜித் ரசிகர்கள் அதிருப்தி: வாரிசு படத்துடன் துணிவு வெளியான போது அஜித் ரசிகர்கள் செம ஹேப்பியாக இருந்தனர். ஆனாலும், துணிவை விட வாரிசு வசூல் அதிகம் எனக் கூறப்பட்ட நிலையில், அடுத்த படத்தில் பார்த்துக் கொள்ளலாம் என இருந்த ரசிகர்களை 2 ஆண்டுகள் காக்க வைத்து விடாமுயற்சி படத்தை இந்த ஆண்டு பொங்கலுக்கும் ரிலீஸ் செய்யாமல் பிப்ரவரி 6ம் தேதி வெளியிட்டனர். ஆனால், அந்த படமும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் அஜித் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அஜித் இந்த படத்தை பார்க்கணும்: கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் ஹீரோ ஒருவர் இயக்குநரான அஜித்திடம் தான் சொல்லும் கதையை படமாக பண்ண வேண்டும் என வற்புறுத்த, "தைரியமில்லாத கதாநாயகன், காசில்லாத புரொட்யூசர் வேணாம்.. எதுவுமே எனக்கு வேணாம்" என அஜித் தூக்கிப்போட்டு போகும் காட்சியை பதிவிட்டு, இப்படி இயக்குநர்களை அவங்க கதையை பண்ண விடாமல் அஜித் தடுக்க வேண்டாம் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த படத்தையும் மறுபடி பார்க்க சொல்லுங்க என்றும் கூறி வருகின்றனர். இந்தளவுக்கு ரசிகர்கள் அதிருப்தியடைந்த நிலையில், இதையெல்லாம் குட் பேட் அக்லி டீசர் வந்தாலே மாற்றிவிடும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X