Leo: லோகேஷ் கனகராஜ் மோசமான இயக்குநரா?.. வெற்றிமாறன் பேச்சை வைத்து லியோவை இப்படி கலாய்க்குறாங்களே!

சென்னை: இதுவரை தோல்வி படங்களே கொடுக்காத இயக்குநர்கள் லிஸ்ட்டில் வெற்றிமாறன் மற்றும் லோகேஷ் கனகராஜ் தான் தமிழ் சினிமாவில் உள்ளனர் என லியோ படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு வரை ரசிகர்கள் ஃபயர் விட்டு வந்தனர்.

Fans shares Vetrimaran good director and poor director speech and trolls Lokesh Kanagaraj

மாஸ்டர் படத்தில் கூட அந்த கிளைமேக்ஸ் சண்டை காட்சியை தவிர்த்து ஒட்டுமொத்த படத்தையும் ரசிகர்கள் கொண்டாடினர்.

ஆனால், லியோ படத்தை ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை எந்தளவுக்கு ட்ரோல் செய்ய முடியுமோ ட்ரோல் செய்து வருகின்றனர். இந்நிலையில், வெற்றிமாறன் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் நல்ல இயக்குநருக்கும் மோசமான இயக்குநருக்கும் உள்ள வேறுபாடு குறித்து பேசிய வீடியோவை ஷேர் செய்து கலாய்த்து வருகின்றனர்.

ஃபிளாஷ்பேக்கில் எது பொய்?: லியோ படத்தின் இரண்டாம் பாதி தான் அதிகம் கலாய்க்கப்பட்டதாக நினைத்துக் கொண்டு ஃபிளாஷ்பேக் காட்சியே பொய் என லோகேஷ் கனகராஜ் ஏகப்பட்ட ஃபேன்ஸ் தியரிக்களை போல இவரும் லியோவுக்கு தியரிக்களை சொல்லி முட்டுக் கொடுத்து வருகிறார். ஃபிளாஷ்பேக்கில் என்ன விஷயம் பொய் என்பதை லோகேஷ் கனகராஜ் தெளிவாகவே சொல்லவில்லை என்பது தான் உண்மை என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

மன்சூர் அலி கான் நான் தூக்கி வளர்த்த பையன் லியோ என கதையை ஆரம்பிக்க, யாரோ ஒரு மூணாவது மனுஷன் சொல்ற கதை என லோகேஷ் சொல்கிறார். மேலும், லியோவுக்கு தங்கை இருந்ததும் தங்கையை கொன்றது குறித்தும், மகனையும் கிளைமேக்ஸில் நரபலி கொடுக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லும் வரை அனைத்து காட்சிகளும் இடம்பெற்ற நிலையில், ஃபிளாஷ்பேக்கில் எந்த போர்ஷன் மன்சூர் அலி கான் பர்ஸ்பெக்டிவ் என்றும் எது பொய் என்கிற கேள்வியும் சாமானிய ரசிகர்களுக்கே எழத்தான் செய்கிறது.

Fans shares Vetrimaran good director and poor director speech and trolls Lokesh Kanagaraj

குட்டு வைத்த வெற்றிமாறன்: படம் பண்ணிட்ட பிறகு தயாரிப்பு தரப்பு டைம் கொடுக்கவில்லை, உல்ஃப் சீன் வைக்க சிஜிக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை, இது முழுக்க கேரக்டர் ஸ்கெட்ச் படம், ஈவென்ட் படம் இல்லை என எந்தளவுக்கு லியோவுக்கு முட்டுக் கொடுக்க முடியுமோ லோகேஷ் முட்டுக் கொடுத்து வரும் நிலையில், சிறந்த இயக்குநருக்கும் மோசமான இயக்குநருக்கும் உள்ள வேறுபாடு குறித்து வெற்றிமாறன் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பேசிய வீடியோவை ரசிகர்கள் ஷேர் செய்து லோகேஷ் கனகராஜுக்கு குட்டு வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X