கர்ப்பிணி பொண்ணுங்க இப்படி பண்ண மாட்டாங்களே.. நடிகை வெளியிட்ட வீடியோவால் ஷாக்கான ரசிகர்கள்!

சென்னை: நடிகை சமந்தா வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Recommended Video

Samantha Gym Workout Goes Viral | Keerthy Suresh Miss Indian all Set to Release

நடிகை சமந்தா தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம் ஃபேர் விருதை பெற்றார் நடிகை சமந்தா.

தொடர்ந்து தமிழ் படங்களில் அறிமுகமானார் நடிகை சமந்தா. தமிழில் முன்னணி நடிகர்கள் பலருடனும் இணைந்து நடித்துள்ளார் நடிகை சமந்தா.

முன்னணி நடிகை

முன்னணி நடிகை

நடிகர் விஜயுடன் கத்தி, மெர்சல், தெறி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதேபோல் சூர்யா, தனுஷ், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டுள்ளார் நடிகை சமந்தா. தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை சமந்தா.

நாக சைதன்யா

நாக சைதன்யா

நடிகை சமந்தாவுக்கும் நடிகர் சித்தார்த்துக்கும் இடையில் காதல், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று தகவல் பரவியது. இருவரும் ஒன்றாக சேர்ந்து கோவிலில் சிறப்பு பூஜையெல்லாம் செய்தனர். ஆனால் கடைசியில் நடிகர் நாகர்ஜூனின் மகன் நடிகர் நாக சைதன்யாவை நடிகை சமந்தா திருமணம் செய்து கொண்டார்.

கர்ப்பம்

கர்ப்பம்

திருமணத்திற்கு பிறகு சமந்தாவின் சினிமா கிராஃப் வேறு மாதிரியாக உள்ளது. திருமணத்திற்கு பிறகு நடித்த அனைத்து படங்களுமே பெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நடிகை சமந்தா கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இதன் காரணமாகவே அவர், விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இருந்து விலகுவதாக தகவல் வெளியானது.

எடையை தூக்கி

இந்நிலையில் நடிகை சமந்தா, குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது நடிகை சமந்தா ஜிம்மில் ஹார்டு வொர்க் செய்கிறார். குறிப்பாக எடைத் தூக்கும் உடற்பயிற்சியை செய்கிறார் நடிகை சமந்தா. கர்ப்பிணி பெண்கள் இதுபோன்ற உடற்பயிற்சிகளை செய்ய மாட்டார்கள்.

அதிர்ச்சியும் ஏமாற்றமும்

அதிர்ச்சியும் ஏமாற்றமும்

முதல் 5 மாதங்கள் வரை அதிக எடை உள்ள பொருட்களை தூக்கக்கூடாது என்றுதான் அறிவுறுத்துவார்கள். ஆனால் சமந்தா, ஜிம்மில் அந்த வேலையைதான் முதன்மையாக செய்கிறார். இதனால் அவர் கர்ப்பமில்லை என தெரிகிறது. அவரது இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

ரசிகர்கள் குழப்பம்

ரசிகர்கள் குழப்பம்

இப்படி ஹார்டுவொர்க் செய்கிறீர்களே நீங்கள் கர்ப்பம் இல்லையா என கேட்டு வருகின்றனர் ரசிகர்கள். அதே நேரத்தில் அந்த ஜிம் வீடியோ சமீபத்தில் எடுக்கப்பட்டதா இல்ல பழைய வீடியோவா என்ற தகவலும் இல்லை. சமந்தா கர்ப்பமா இல்லையா என்ற தகவலே இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் தற்போது இப்படி ஒரு வீடியோ வெளியாகி ரசிகர்களை குழப்பி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X