அய்யய்யோ என்னாச்சு உங்களுக்கு.. எமியின் போட்டோவை பார்த்து பதறிய ரசிகர்கள்!
சென்னை: நடிகை எமி ஜாக்ஸன் வெளியிட்டுள்ள புதிய போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் மிரண்டு பதறி போயுள்ளனர்.
நடிகை எமி ஜாக்ஸன் தமிழில் மதராசப்பட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானார். மதராசப்பட்டினம் படத்தில் வெளிநாட்டு பெண்ணாகவே கொள்ளை அழகில் தோன்றிய எமி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.
தொடர்ந்து முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி போட்டார் எமி ஜாக்ஸன். தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்தார்.

ஆண்குழந்தை
தனது காதலருடன் நெருங்கி பழகிய எமி ஜாக்ஸன் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானார். இதனை தொடர்ந்து அண்மையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

மீண்டும் விருப்பம்
கர்ப்ப காலத்தை முன்னிட்டு சமீப காலமாக சினிமாவில் நடிக்காமல் ரெஸ்டில் இருந்த எமி ஜாக்ஸன், தற்போது மீண்டும் நடிக்க விருப்பப்படுகிறார். இதன் காரணமாக தனது போட்டோக்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

பதறிய ரசிகர்கள்
அதன்படி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமி ஜாக்ஸன் வெளியிட்ட படத்தை பார்த்த ரசிகர்கள் பதறி போய்விட்டனர். காரணம் அவரது தலைமுடிதான்.

டீப் ஓபன்
வெள்ளை நிற முடியில் பொம்மையா எமியா என ஆச்சரியப்படும் வகையில் உள்ளது அவரது ஹேர் ஸ்டைல். நீண்ட கவுனில் ஒய்யாரமாய் போஸ் கொடுத்திருக்கும் எமி, சைடில் டீப் ஓபன், மேலே டீப் நெக் என படு அசத்தலாய் உள்ளார்.

சுவடே தெரியல
ஆனால் குழந்தை பெற்ற சுவடே இல்லாமல் நச்சென இருக்கிறார் எமி ஜாக்ஸன். அதோடு ஒரு குழந்தைக்கு தாய் என்று கூற முடியாத அளவுக்கு கடைசியாக 2.o படத்தில் பார்த்ததை போலவே இருக்கிறார் எமி ஜாக்ஸன்.


Click it and Unblock the Notifications











