அட...பீஸ்ட் ரிலீஸ் தேதி இதுதானா...கன்ஃபார்ம் செய்தது யார் தெரியுமா ?

சென்னை : விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் பற்றி எந்த அப்டேட்டும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படாத நிலையில், பல புதிய தகவல்களுடன் பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி கன்ஃபார்ம் செய்யப்பட்டுள்ளது. இதை ஏன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என ரசிகர்கள் குழப்பத்துடன் கேட்டு வருகின்றனர்.

விஜய்யின் 65 வது படமாக உருவாகி உள்ள பீஸ்ட் படத்தை டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தின் ஃபஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் டைட்டிலுடன் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜுலை மாதம் வெளியிடப்பட்டது. அதற்கு பிறகு எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆனால் சமீபத்தில் பீஸ்ட் படத்தின் ஷுட்டிங் நிறைவடைந்து விட்டதாக தகவல் வெளியானது.

 பீஸ்ட் அப்டேட் எப்போ

பீஸ்ட் அப்டேட் எப்போ

இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதி உள்ளதாக கூறினார்கள். பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கிள் முதலில் தீபாவளிக்கு வெளியிடப்பட உள்ளதாக கூறப்பட்டது. பிறகு புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து தள்ளிப் போனது. பீஸ்ட் படம் பற்றி முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என தினந்தோறும் சோஷியல் மீடியாக்களில் பலரும் தகவல் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் எதுவும் நடக்கவில்லை. சன் பிக்சர்சும் பீஸ்ட் பற்றி எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனால் பீஸ்ட் அப்டேட்டை எதிர்பார்த்து ரசிகர்கள், #Beast ஹேஷ்டேக்கை அடிக்கடி டிரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

பீஸ்ட் ரிலீஸ் தேதி இதுவா

பீஸ்ட் ரிலீஸ் தேதி இதுவா

இதற்கிடையில் பீஸ்ட் படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக விக்கிபீடியாவில் பதிவிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்சோ, படக்குழுவை சேர்ந்த மற்றவர்களோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில் பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதியை விக்கிபீடியா பகிர்ந்துள்ளதால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். அதோடு சில புதிய தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளது.

ஒரே சமயத்தில் 5 மொழிகளில்

ஒரே சமயத்தில் 5 மொழிகளில்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தியேட்டர்களில் பீஸ்ட் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக விக்கிபீடியாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழில் மட்டுமல்ல இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் அன்றைய தினமே பீஸ்ட் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. IMDb இணையதளத்தில் Top 10 Anticipated Indian movies of 2022 பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே தமிழ் படம் பீஸ்ட் தான் எனவும் விக்கிபீடியா பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஃபஸ்ட் சிங்கிள் தாமதத்திற்கு இதுதான் காரணமா

ஃபஸ்ட் சிங்கிள் தாமதத்திற்கு இதுதான் காரணமா

2021 ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முன்பே இசையமைப்பாளர் அனிருத், பீஸ்ட் படத்தின் அனைத்து பாடல்களின் வேலைகளையும் முடித்து விட்டாராம். அக்டோபர் மாதம் அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஃபஸ்ட் சிங்கிள் வெளியிடப்படுவதாக இருந்ததாம். ஆனால் தீபாவளிக்கு வெளியிடலாம் என தள்ளி வைத்தார்களாம். ரஜினிகாந்தின் அண்ணாத்த ரிலீஸ், கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் திடீர் மரணம் போன்ற காரணங்களால் தான் பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கிள் வெளியிடுவது தொடர்ந்து தாமதமானதாம்.

இன்னொரு வாத்தி கம்மிங் பாடலா

இன்னொரு வாத்தி கம்மிங் பாடலா

புத்தாண்டிற்கும் ஃபஸ்ட் சிங்கிள் வெளியிட முடியாமல் போனதால், பொங்கலுக்கு தள்ளி வைத்தார்கள். ஆனால் பொங்கலுக்கும் வெளியிடவில்லை. அதே சமயம், மாஸ்டர் படத்தின் செம ஹிட் பாடலான வாத்தி கம்மிங் பாடலைப் போல் மற்றொரு பாடலை பீஸ்ட் படத்திற்காக அனிருத் உருவாக்கி இருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X