எப்படி இருந்த பிரசாந்த்.. இப்படி ஆகிட்டாரே.. ரசிகர்கள் வேதனை.. அதிர்ச்சி!
Recommended Video

சென்னை: நடிகர் பிரசாந்தின் தற்போதைய நிலையை பார்த்து அவரின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
ஒரு காலத்தில் முன்னணி ஹீரோவாக இருந்தவர் பிரசாந்த். திருமணத்திற்கு பிறகு அவரின் கெரியர் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஹீரோ கதாபாத்திரம் கிடைக்காத நிலையில் அவர் அதிரடி முடிவு எடுத்துள்ளார்.
தெலுங்கில் ராம் சரண் நடித்து வரும் வினய விதய ராமா படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பிரசாந்த்.

அதிர்ச்சி
உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் நடித்த பிரசாந்த் இப்படி ஹீரோவுக்கு பின்னால் வரும் நான்கு பேரில் ஒருவராக நடிப்பதை பார்த்து அவரின் ரசிகர்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர். அப்படி இருந்த சாக்லேட் பாய்க்காக இப்படி ஒரு நிலை என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
டாப் ஸ்டார்
டபுள் பைக்ல ஸ்டேண்டிங்ல வந்தவர்டா எங்க டாப் ஸ்டார்
சைடு கதாபாத்திரம்
டாப் ஸ்டார் பிரசாந்துக்கா இந்த நிலை?

அதிசயம்
ஷங்கர் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராயுடன் உலக அதிசயங்களை சுற்றிப் பார்த்து டூயட் பாடினார் பிரசாந்த். ஜீன்ஸ் படத்தை பார்த்து ஆண்கள் ஐஸ்வர்யா ராயை பார்த்து ஜொள்ளுவிட்டால், பெண்கள் பிரசாந்தை பார்த்து மயங்கினார்கள். அப்படிப்பட்ட ஆணழகன் இப்படி சைடு கதாபாத்திரத்தில் நடிப்பதை பார்த்தால் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகத் தானே இருக்கும்.
விஜய்
தெலுங்கு பக்கம் செல்வதற்கு பதில் அஜித், விஜய்க்கு வில்லனாக நடிக்கலாம் என்று ஒருவர் ஐடியா கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











