"அட நம்ம கோவை சரளாவா இது?" - செம்பி போஸ்டரைப் பார்த்த ரசிகர்கள் ஷாக்

சென்னை: காடன் படத்திற்குப் பிறகு இயக்குநர் பிரபு சாலமன் இயக்கும் புதிய படத்தின் பெயர் செம்பி.

இத்திரைப்படத்தில் காமெடி நடிகை கோவை சரளா 70 வயது பாட்டியாக மிரட்டலான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இன்று வெளியான அப்படத்தின் போஸ்டரைக் கண்ட ரசிகர்கள், நம்ம கோவை சரளாவா இது என ஷாக் ஆகியிருக்கின்றனர்.

காமெடி டு சீரியஸ்

காமெடி டு சீரியஸ்

தமிழ் சினிமாவில் பேய் படங்களில் கூட தனது தனித்துவமான நடிப்பினாலும், வசன உச்சரிப்பினாலும் மக்களை சிரிக்க வைத்தவர் நடிகை கோவை சரளா. இதுவரை காமெடி கதாப்பாத்திரத்தில் மட்டுமே கலக்கி வந்த அவர், செம்பி திரைப்படத்தில் சற்று வித்தியாசமாக சீரியசான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆச்சி மனோரமாவிற்குப் பிறகு அவ்விடத்தை நிரப்பத் தகுதி வாய்ந்தவராகக் கருதப்பட்ட கோவை சரளா இனி குணச்சித்திர வேடங்களிலும் கலக்கவிருக்கிறார்.

குக் வித் கோமாளி அஸ்வின்

குக் வித் கோமாளி அஸ்வின்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த அஸ்வின் இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். முந்தைய விழா மேடை ஒன்றில் கதை கேட்டால் தூங்கிவிடுவேன் என்று உளறிக் கொட்டி சர்ச்சையில் சிக்கிய அவருக்கு பிரபு சாலமனோடு இணையும் வாய்ப்பு கிடைத்தது அதிருஷ்டமே. இத்திரைப்படம் அவருக்குத் திருப்பு முனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காடன் தோல்வி

காடன் தோல்வி

மைனா, கும்கி, கயல் என தொடர் ஹிட் படங்களைக் கொடுத்து வந்த இயக்குநர் பிரபு சாலமன், தொடரி, காடன் என அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்தார். இந்நிலையில் கொடைக்கானலிருந்து திண்டுக்கல் நோக்கிச் செல்லும் பேருந்துப் பயணத்தை கதைக் கருவாகக் கொண்டு தற்போது செம்பி படத்தை இயக்கியிருக்கிறார். இத்திரைப்படம் அவரது வெற்றியை மீண்டும் தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மிரட்டலான பர்ஸ்ட் லுக்

மிரட்டலான பர்ஸ்ட் லுக்

செம்பி படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியிருக்கிறது. அஸ்வின், கோவை சரளாவோடு சேர்ந்து நடிகர் தம்பி ராமையா மற்றும் அவினாசியைச் சேர்ந்த 10 வயது பெண்ணும் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X