"நாங்க அப்டியே ஷாக் ஆய்ட்டோம்..." - காயத்ரி திருமண ட்வீட்டால் பரபரப்பு!
சென்னை : நடிகைகளுக்கு திருமணம் என்றால் கவலைப்படும் ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படி சமீபத்தில் ரசிகர்களிடையே பரபரப்பைக் கிளப்பியவர் நடிகை காயத்ரி.
'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் நாயகி காயத்ரி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "எனக்கு திருமணம் நடக்கப் போகிறது" என்று ட்வீட் செய்தார்.
இதனால் அவரது ரசிகர்கள் பலர் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர். பிறகு இன்னொரு ட்வீட்டில் அதற்கு விளக்கம் அளித்துள்ளார் காயத்ரி.
நடிகை காயத்ரி
நடிகை காயத்ரி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "எனக்கு திருமணம் நடக்கப் போகிறது" என்று ட்வீட் செய்தார். அவரது திடீர் திருமண அறிவிப்பால் ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

திருமணமா?
அவரது ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் என்னது திருமணமா?, இப்படி ஒரு அதிர்ச்சி கொடுக்கிறீர்களே என்று கமென்ட் செய்து வந்தனர்.

திருமணத்திற்கு அழைப்பு
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், 'ஓகே... எங்க வரணும்?" எனக் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த காயத்ரி, 'நீ இல்லாமயா' எனக் கேட்டிருந்தார்.
தொண்டையக் கவ்வுது
என்னடா மேரேஜ்ன்னு சொன்னதும் லைட்டா தொண்டை கவ்வுது... காயத்ரி சொன்னாங்கனா அப்படி தான்னே கவ்வும்!
கல்யாணத்தின் போது
கல்யாணத்தப்போ இதான் நடக்கும் என 'ப்ப்பா' என விஜய் சேதுபதி காயத்ரியை பார்த்துச் சொல்லும் புகைப்படத்தை கமென்ட் செய்துள்ளனர்.
ஒரு பேட்டிக்காக
இந்த நிலையில் மீண்டும் காயத்ரி தன்னுடைய ட்விட்டரில், "ஒரு பேட்டியில் காமெடிக்காக இப்படி ஒரு பதிவு போட சொன்னார்கள். விரைவில் என்ன பேட்டி அது என்ற விவரத்தை அறிவிப்பேன்" என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











