விருமன் இசைவெளியீட்டு விழா.. “ரோலக்ஸ்.. ரோலக்ஸ்“என ரசிகர்கள் கூச்சலிட்டதால் சலசலப்பு!
சென்னை : விருமன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரோலக்ஸ்..ரோலக்ஸ்..என கூச்சலிட்டு ரசிகர்கள் கத்தியதால் விழாவில் சலசலப்பு ஏற்பட்டது.
யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இப்படத்திற்கு எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் 'கஞ்சா பூவு கண்ணால' பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
சூர்யா தனது 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். ஆகஸ்ட் 12ம் தேதி இந்தப் படம் ரிலீசாக உள்ளது.

விருமன்
இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கொம்பன்'. நடிகர் கார்த்தி நடித்திருந்த இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். கிராமத்து கதையை மையப்படுத்திய இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது ஏழு ஆண்டுகள் கழித்து 'விருமன்' படத்தின் மூலம் முத்தையா - கார்த்தி கூட்டணி இணைந்துள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா
சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாக அறிமுகமாகிறார். தந்தை-மகன் உறவை மையப்படுத்தி இயக்கப்பட்டுள்ள விருமன் படத்தில், ராஜ்கிரண், சூரி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இசைவெளியீட்டு விழா
இந்நிலையில், மதுரையில் தற்போது இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் விஜய் மற்றும் அஞ்சனா ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். ஆனால், ரசிகர்களோ யாரையும் பேசவிடாமல் ரோலக்ஸ்..ரோலக்ஸ் என கத்தி கூச்சலிட்டனர். பலரும் அவர் நிகழ்ச்சிக்கு நிச்சயம் வருவார் அனைவரும் அமைதியாக இருங்கள் என்று கூறிய போதும் ரசிகர்கள் தொடர்ந்து கூச்சலிட்டுக் கொண்டே இருந்தனர்.

ரோலக்ஸ்.. ரோலக்ஸ்
இதையடுத்து, நிகழ்ச்சிக்கு சூர்யா வந்ததும் ஒட்டுமொத்தமாக ரசிகர்கள் எழுந்து இன்று ரோலக்ஸ் என்று கத்தத் தொடங்கினர். நீங்கள் எதிர்பார்த்த சூர்யா வந்துவிட்டார் விரைவில் அவர் பேசுவார் அனைவரும் அமைதியாக இருங்கள் என்று கூறிய போதும் ரசிகர்கள் அமைதியாக இல்லாமல் கத்தினார்கள். இதையடுத்து, இருக்கையில் இருந்து எழுந்த சூர்யா உங்களுக்காகத்தான் இங்கு வந்து இருக்கிறேன். அனைவரும் பேசிய பிறகு நிச்சயம் பேசுவேன் அதுவரை அமைதியாக இருங்கள் என்றும் சொன்ன பிறகும் ரசிகர்கள் தொடர்ந்து கூச்சலிட்டுக்கொண்டே இருந்தனர். இதனால், விழாவில் சலசலப்பு ஏற்பட்டது.


Click it and Unblock the Notifications











