Jailer: FDFS டிக்கெட்டுகளை மாலையாக அணிந்த ரசிகர்.. அமெரிக்காவில் சுவாரஸ்யம்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் இன்னும் சில தினங்களில் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள நிலையில், படம் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ளது.

Fans shows interest to Book Actor Rajinikanths Jailer movie tickets worldwide

இந்தியாவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் ஜெயிலர் படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக காணப்படுகிறது.

அமெரிக்காவில் ஜெயிலர் பட டிக்கெட்டுகளை மாலையாக அணிந்த ரசிகர்: நடிகர்கள் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் ஜெயிலர். இந்தப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. சர்வதேச அளவில் இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்து வருகின்றனர். நீண்ட காலங்களுக்கு பிறகு ரஜினியின் ஜெயிலர் படம் அதிகமான வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் ரிலீசை திருவிழாவாக கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா என படத்தின் ப்ரீ புக்கிங் துவங்கியுள்ள நிலையில், ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு, படத்திற்கான புக்கிங்கை மேற்கொண்டு வருகின்றனர். எப்போதுமே ரஜினி படங்களில் குடும்பத்துடன் சென்று பார்க்கவே ரசிகர்கள் விரும்புவார்கள். இது காலம் காலமாக இருக்கும் நடைமுறை. இந்த நடைமுறை தற்போது மீண்டும் திரும்பியுள்ளது. ரசிகர்கள் இந்தப் படத்தை தங்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து பார்க்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் ரசிகர் இதுபோல தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஜெயிலர் படத்தின் டிக்கெட்டுகளை புக் செய்ததை வீடியோவாக வெளியிட்டுள்ளார். மேலும் இந்தப் படத்திற்காக தான் பெற்ற டிக்கெட்டுகளை மாலையாக அணிந்துக் கொண்டு தன்னுடைய உற்சாகத்தை வெளிப்படுத்தினார். அவரது டிக்கெட்டுகள் ஆளுயர மாலையாக அமைந்தது. மேலும் ஜெயிலர் பட போஸ்டரின் முன்பும் புகைப்படம் எடுத்துக் கொண்டு தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்தார்.

Fans shows interest to Book Actor Rajinikanths Jailer movie tickets worldwide

படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்சும் தன்னுடைய பங்கிற்கு அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியான படத்தின் ட்ரெயிலரில் மோககன்லால், தமன்னா மற்றும் சிவராஜ்குமார் உள்ளிட்டவர்கள் இடம்பெறவில்லை. இந்நிலையில் இன்றைய தினம் ரஜினி மற்றும் மோகன்லால் இணைந்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ். இந்தப் படத்தில் மேத்யூ என்ற கேரக்டரில் மோகன்லால் நடித்துள்ளார்.

அனிருத் இசையில் படத்தின் அடுத்தடுத்து மூன்று பாடல்கள் வெளியான நிலையில் இன்று மாலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ள ரத்தமாரே என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகவுள்ளது. படம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள நிலையில், வசூல்மழையை பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு தகுந்தாற்போல ரசிகர்கள், டிக்கெட் புக்கிங்கை அதிகளவில் செய்து வருகின்றனர். சென்னையிலும் விரைவில் டிக்கெட் புக்கிங் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X