சாவித்ரியை பார்த்து எப்படி அந்த வார்த்தையை சொல்லலாம்: சர்ச்சையில் சிக்கிய அர்ஜுன் ரெட்டி ஹீரோ

By Siva

Recommended Video

சாவித்ரி கணேசனை கூல் சிக் என்ற அர்ஜுன் ரெட்டி ஹீரோ

சென்னை: சாவித்ரி கணேசனை கூல் சிக் என்று கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார் அர்ஜுன் ரெட்டி பட ஹீரோ விஜய் தேவரகொண்டா.

நடிகையர் திலகம் சாவித்ரி கணேசனின் வாழ்க்கை வரலாறு மகாநதி என்ற பெயரில் படமாகியுள்ளது. இந்த படத்தில் அர்ஜுன் ரெட்டி பட புகழ் விஜய் தேவரகொண்டாவும் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் சாவித்ரி பற்றி ஒரு விஷயத்தை தெரிவித்து விமர்சித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

விஜய்

விஜய்

சாவித்ரிக்கு ரேஸ் கார்கள் என்றால் பிடிக்கும். ஒரு காலத்தில் சென்னையில் அதிகம் வின்டேஜ் கார்கள் வைத்திருந்தது அவர் தான் என்று கூறி புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டார் விஜய் தேவரகொண்டா.

சர்ச்சை

விஜய் தேவரகொண்டா சாவித்ரியின் புகைப்படத்தை வெளியிட்டதுடன் What a Cool Chick என்று குறிப்பிட்டிருந்தார். ஒரு பெரிய நடிகையை பார்த்து இப்படியா மரியாதை இல்லாமல் சிக் என்பது என ஆளாளுக்கு விஜய் மீது பாய ஆரம்பித்துவிட்டனர்.

சென்னை

நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என நினைப்பவர்கள் சென்னை லீலா பேலஸ் ஹோட்டலுக்கு வாங்க. உங்களுக்கு மகாநதி இசை வெளியீட்டு விழா டிக்கெட்டுகளை கூட தருகிறேன். நீங்கள் எல்லாம் அவர் காலத்தில் இருந்திருந்திருந்தால் அவர் மகிழ்ச்சி அடைந்திருப்பார். ஏனென்றால் ஒரு காலத்தில் அவரை குடியை கெடுத்தவர், குடிக்கு அடிமை என்றார்கள் என்று தெரிவித்துள்ளார் விஜய்.

புகழ்ச்சி

குடியை கெடுத்தவர், குடிக்கு அடிமை என்பதுடன் ஒப்பிடும்போது புகழ்ச்சியில் வாட் ஏ கூல் சிக் என்று நான் கூறியதை பார்த்து அவர் மகிழ்ந்திருப்பார் என நினைக்கிறேன் என்கிறார் விஜய் தேவரகொண்டா.

போஸ்ட்

நான் எப்படி போஸ்ட் போட வேண்டும் என்று தீர்மானிக்க விரும்பினால் நீங்கள் வேலை கேட்டு "[email protected]" என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கு வேலை கிடைக்கும் என்று பதில் அளித்துள்ளார் விஜய்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X