Kerala Story: இதுக்கு உங்க புருஷனே பரவாயில்லை.. தேவதர்ஷினியை அந்த காரணத்துக்காக விளாசும் ரசிகர்கள்!
சென்னை: சின்னத்திரை, வெள்ளித்திரை என கலக்கி வரும் நடிகை தேவதர்ஷினியை தமிழ் சினிமா ரசிகர்கள் பலர் வெளுத்து வாங்கி வருகின்றனர்.
சமந்தாவின் சர்ச்சைக்குரிய தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸ், தி கேரளா ஸ்டோரி என தொடர்ந்து நடிகை தேவதர்ஷினி சர்ச்சைக்குரிய படங்களாக தேர்வு செய்து நடித்து வருவது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி நடிகை தேவதர்ஷினியை விளாசி வருகின்றனர்.
சமீபத்தில் வெளியான தி கேரளா ஸ்டோரி படத்துக்கு எதிராக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பல போராட்டங்கள் வெடித்து வரும் நிலையில், அந்த படத்தில் நாயகி அதா சர்மாவின் அம்மாவாக நடித்துள்ளார் தேவதர்ஷினி.

விடுதலை படத்தில் மோசமான போலீஸ்: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி, கவுதம் மேனன், பவானிஸ்ரீ நடிப்பில் வெளியான விடுதலை படத்தில் மோசமான போலீஸ் அதிகாரியாக சேத்தன் நடித்த நிலையில், தியேட்டரிலேயே அவரை அடித்ததாக தேவதர்ஷினி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
பெண்களை நிர்வாணப்படுத்தி விசாரணை எனும் பெயரில் காட்டுமிராண்டித்தனம் செய்யும் கேவலமான போலீஸ் அதிகாரியாக சேத்தன் நடித்து இருந்த நிலையில், அவர் நம்பியாரை விட மோசமான வில்லனாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வறுத்தெடுக்கப்பட்டார்.
ஆனால், அவரது கதாபாத்திரம் மற்றும் நடிப்பு சிறப்பாக இருந்தது தான் அதற்கான காரணம் என பலரும் பாராட்டினர்.

சர்ச்சை படங்களில் நடிக்கும் தேவதர்ஷினி: ஆனால், சேத்தனே பரவாயில்லை போல அவரது மனைவி தேவதர்ஷினி தொடர்ந்து சர்ச்சைக்குரிய படங்களையே தேடித் தேடி தேர்வு செய்து நடித்து வருகிறார் என நெட்டிசன்கள் குற்றச்சாட்டுக்களை அடுக்கி உள்ளனர்.
மேலும், சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ள தி கேரளா ஸ்டோரி படத்தில் நடித்தது மட்டுமின்றி தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த படத்துக்கான ப்ரமோஷன்களையும் ஏகபோகமாக செய்து வரும் தேவதர்ஷினியை அவர் பதிவிடும் போஸ்ட்டுக்கு கீழ் பல ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

தி கேரளா ஸ்டோரி படத்தில் நடித்த தேவதர்ஷினி: இஸ்லாமிய மக்களின் விரோதத்தை சம்பாதிக்கும் விதமாக உருவாகி உள்ள தி கேரளா ஸ்டோரி படத்துக்கு பாஜகவினர் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.
ஆனால், பாலிவுட்டில் கூட கங்கனா ரனாவத், அனுபம் கெர் உள்ளிட்ட சில பாஜக ஆதரவாளர்களை தவிர வேறு எந்தவொரு பிரபல நடிகர்களும் இந்த படத்தை கண்டுக்கொள்ளவே இல்லை.

இந்நிலையில், அந்த படத்தில் ஹீரோயின் அதா சர்மாவுக்கு அம்மாவாக நடித்துள்ள தேவதர்ஷினி தொடர்ந்து படத்துக்கு ப்ரமோஷன் செய்து வரும் நிலையில், "கேரளா ஸ்டோரி படத்தின் கதையை முழுவதுமாக கேட்டு தான் நடிக்க ஒத்துக் கொண்டீர்களா? இனிமேலாவது கதையை சரியாக தேர்தெடுக்க முயற்சி செய்யுங்கள் என்றும் உங்களுக்கு வேற நல்ல படமே கிடைக்கலையா? இப்படியொரு வொர்ஸ்ட் ஆன மதவெறியை தூண்டும் படத்தில் நடித்து விட்டு இப்படி போஸ்ட் வேற போடுறீங்களே வெட்கமா இல்லையா? என நடிகை தேவதர்ஷினியை திட்டித் தீர்த்து வருகின்றனர்.
முன்னதாக தமிழர்கள் மற்றும் ஈழத் தமிழர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த தி ஃபேமிலி மேன் 2 ஸ்டோரி வெப்சீரிஸிலும் நடிகை தேவதர்ஷினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











