கொரோனாவுக்கு குத்தாட்ட வீடியோவா? தீவிரம் தெரியாத ஹீரோயினை கடுமையாகத் திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்!
சென்னை: கொரோனாவுக்காக குத்தாட்ட வீடியோ வெளியிட்ட நடிகையை ரசிகர்கள் கடுமையாகத் திட்டித் தீர்த்து வருகின்றனர்.
Recommended Video
தமிழில், மழை, தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விக்ரமின் கந்தசாமி, ஜீவாவின் ரெளத்ரம் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரேயா.
இந்தி, தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். பல படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார்.

தமிழில்
மலையாளத்தில் ஹிட்டான த்ரிஷயம் படத்தின் இந்தி ரீமேக்கில் அஜய்தேவ்கன் ஜோடியாக ஸ்ரேயா நடித்திருந்தார். இந்தப் படம் கவனிக்கப்பட்டது. இப்போது தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் அது பற்றி தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கும் என்றும் கூறி இருந்தார், நடிகை ஸ்ரேயா.

ரஷ்ய தொழிலதிபர்
இவர், கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், எனக்கு திருமணமாகி, அதற்குள் கிட்டத்திட்ட 2 வருடங்கள் ஆகிவிட்டது என்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று தெரிவித்து இருந்தார்.

படப்பிடிப்புகள்
இந்நிலையில், கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை அந்தந்த நாட்டு அரசுகள் எடுத்து வருகின்றன. இதன் காரணமாக, தற்போது சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே, நடிகர், நடிகைகள் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறி வருகின்றனர்.
View this post on InstagramA post shared by Shriya Saran (@shriya_saran1109) on
பார்சிலோனா
நடிகை ஸ்ரேயா வித்தியாசமாக டான்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆங்கில பாடலுக்கு பால்கனியில் நின்றுகொண்டு டான்ஸ் ஆடுகிறார். அவர் கணவர் அதை வீடியோவாக எடுத்துள்ளார். அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஸ்ரேயா, பத்து நாட்களாக பார்சிலோனாவில் இருக்கிறேன். தயவு செய்து வீட்டிலேயே இருங்கள். உங்களையும் வீட்டில் உள்ள பெரியவர்களையும் குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

குத்தாட்டம்
என்னை போல (டான்ஸ்) நடந்து கொள்ள வேண்டாம். மகிழ்ச்சியாக இருங்கள், அன்பை பரப்புங்கள் என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதற்கு ஏராளமான ரசிகர்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர். ஒருவர், இங்க நாடே, கொரோனா பீதியில செத்துகிட்டு இருக்கு, எங்கயோ உட்கார்ந்துகிட்டு குத்தாட்டம் போட்டுட்டு இருக்கீங்களே?' என்று ஒரு ரசிகர் கேட்டுள்ளார்.

இப்படியொரு வீடியோ
'இத்தாலியிலயா இருக்கீங்க...ரொம்ப ஜாக்கிரதையா இருங்க?' என்று சிலரும் 'இந்தியாவுக்கு கொரோனாவோட திரும்பிடாதீங்க' என்று சில ரசிகர்களும் கூறியுள்ளனர். இன்னும் சில ரசிகர்கள், 'உங்களுக்கு என்ன கிறுக்கா? கொரோனா தீவிரம் தெரியாம இப்படி ஆடிட்டு இருக்கிங்களே? என்று கடுமையாகத் திட்டியுள்ளனர். மேலும் சிலர், உங்களுக்கு பைத்தியமா பிடித்துவிட்டது என்று கேட்டுள்ளனர்.

ஏமாற்றமாக இருக்கிறது
'இத்தாலியில் மட்டும் கொரோனாவால் 640 பேர் இறந்திருக்காங்க...இந்த நேரத்துல இப்படியொரு டான்ஸ் வீடியோ ஏமாற்றமாக இருக்கிறது' என்று சிலர் தெரிவித்துள்ளனர். பல பேர் செத்துகிட்டு இருக்கும்போது, உங்களுக்கு இந்த மாதிரியான கொண்டாட்டம் தேவையா? என்று சிலரும், எதில் விளையாட வேண்டும் என்ற கணக்கு கிடையாதா என்று சிலரும் கடுமையாக அவரை விளாசித் தள்ளியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











