Adipurush: பிரபாஸ் படத்தால் மீண்டும் டிரெண்டான #BoycottBollywood.. இந்து கடவுளை அவமதித்ததாக சர்ச்சை
மும்பை: நடிகர் பிரபாஸின் ஆதிபுருஷ் படத்துக்கு ஏகப்பட்ட பில்டப்புகள் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், படம் வெளியானதும் எல்லாமே ரிவர்ஸ் ஆகி ரிவீட் அடித்து வருவது தான் பாலிவுட்டையே கதி கலங்க வைத்துள்ளது.
பிரம்மாண்டமாக நடைபெற்ற ப்ரமோஷன் மற்றும் டிரெய்லரில் காட்டப்பட்ட மெருகூட்டப்பட்ட காட்சிகளால் படத்தின் புக்கிங் ஆந்திரா, தெலங்கானா மற்றும் வட மாநிலங்களில் அதிகளவில் ஹவுஸ்ஃபுல் ஆகி உள்ளன.

அதனால், முதல் நாளே உலகளவில் 140 கோடி வசூல் எடுத்து அதிரடி காட்டி உள்ள ஆதிபுருஷ் 2வது நாளிலும் கணிசமான வசூலை அள்ளி உள்ளது. ஆனால், தற்போது அந்த படத்தை தடை செய்ய வேண்டும் என #BoycottBollywood என்கிற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருவது தான் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
பாய்காட் பாலிவுட்: பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படம் எப்படி நம்முடைய இந்துக் கடவுளின் புனித நூலான ராமாயணக் கதையை தங்கள் இஷ்டத்துக்கு மாற்றி உருவாக்கி வெளியிடலாம்? இது நம் கடவுளை களங்கப்படுத்தும் செயல், இதனை நிச்சயம் கண்டிக்க வேண்டும். இந்த படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என பாலிவுட்டில் பெரும் போர்க்கொடி கிளம்பி உள்ளது.
பாலிவுட்டில் தொடர்ந்து வெளியாகும் பல படங்களும் இந்து விரோத படமாகவே உருவாகி வருவதாகவும் பத்மாவத், பிரம்மாஸ்திரா, ஆதிபுருஷ் படங்களை போட்டு வெளுத்து வாங்கி வருகின்றனர்.
ராமாயணத்தை கெடுத்து விட்டனர்: இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், சைஃப் அலி கான், க்ரித்தி சனோன் நடிப்பில் வெளியாகி உள்ள ஆதிபுருஷ் திரைப்படத்தில் ராமாயணத்தையும் இந்துக் கடவுள் ராமரையும் முறையாக காட்டவில்லை என்றும் அவமதித்து விட்டனர் என பாலிவுட் ரசிகர்கள் படத்தை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதுதான் ராமாயணம்: ராமானந்த் சாகர் உருவாக்கிய சீரியல் ராமாயணத்தில் ராமாயணத்தையும் ராமரையும் சீதையையும் அத்தனை மரியாதையாக காட்டி இருப்பார்கள். ஆனால், இங்கே அனைத்தையும் கெடுத்துள்ளனர் என பிரபாஸின் படத்தை பங்கம் பண்ணி வருகின்றனர்.
மோசமான வசனங்கள்: ஆதிபுருஷ் படத்தில் மிகவும் மோசமான காட்சிகளும் வசனங்களும் இடம்பெற்றுள்ளன என இந்தியில் ஸ்க்ரீன் ஷாட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.
பிரபாஸின் லுக்கே ஜீசஸ் போல இருப்பதை பார்த்து ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளனர். நடிகர் பிரபாஸ் தனது ரசிகர்களை இப்படி ஏமாற்றி இருக்கக் கூடாது என்றும் இனிமேல் அவர் நடித்து வெளிவரும் படங்களை புறக்கணிப்போம் என்றும் பாலிவுட் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











