அஜித் ஃபேமிலி மட்டும் ஹேப்பியா பார்க்குது.. நாங்க எல்லாம் கேவலமானவங்களா கொதிக்கும் ரசிகர்கள்!
சென்னை: ராக்ஸ்டார் அனிருத் எந்தவொரு பஞ்சாயத்தும் இல்லாமல் பல கச்சேரிகளை சென்னை மற்றும் உலகளவில் நடத்தி வந்த நிலையில், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் சென்னை நிகழ்ச்சி ஏன் இப்படியொரு கலவர பூமியாக மாறியது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி கொந்தளித்து வருகின்றனர்.
மேலும், நடிகர் அஜித்தின் குடும்பம் சந்தோஷமாக இசை கச்சேரியை கண்டுகளித்த நிலையில், 30 ஆயிரம் கொடுத்து பிளாட்டினம் டிக்கெட்டுகளை வாங்கிய நாங்கள் ஏன் கண்ணீருடன் திரும்பி செல்ல வேண்டும் என எலைட் ரசிகர்களும் ஏ.ஆர். ரஹ்மானை வெளுத்து வாங்கி வருகின்றனர்.

கூட்ட நெரிசலில் பல குழந்தைகள் காணாமல் போனதாகவும் பலருக்கு அடிபட்டு ரத்தம் கொட்டியதாகவும் புகார்கள் மலை போல குவிந்து வருகின்றன.
பணத்தாசை தான் காரணம்: பனையூரில் நடைபெற்ற ஏ.ஆர். ரஹ்மானின் இசை கச்சேரிக்கு அதிகளவிலான டிக்கெட்டுகளை விற்று தங்களின் பணத்தாசையை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வெளிப்படுத்தி விட்டனர் என்றும் ஏ.ஆர். ரஹ்மான் பிச்சை எடுக்கிறார் என பல ஆயிரம் ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியும் நிகழ்ச்சி அரங்கிற்கே செல்ல முடியாமல் சோகத்துடன் திரும்பிய ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

ரொம்ப வொர்ஸ்ட்: வெளியே நடக்கும் பிரளயமே தெரியாமல் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளே ஜாலியாக பாடிக் கொண்டிருந்தது தான் ரொம்பவே வொர்ஸ்ட் என்றும் நாங்க எல்லாம் அவரது ரசிகர்கள் சும்மா ஒன்றும் வரவில்லை. 5 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை காசு கொடுத்து டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு குழந்தைகள் முதல் வயதானோர் வரை அழைத்து வந்தோம். ஆனால், இறுதியில் அவஸ்தை மட்டுமே மிஞ்சியது என குமுறி வருகின்றனர்.

அஜித் ஃபேமிலி மட்டும் ஹேப்பியா: நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் அவரது குடும்பத்தினர் விவிஐபி வரிசையில் நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். ஆனால், பிளாட்டினம் டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு நிகழ்ச்சியை காண வந்த எங்களால் கூட நிகழ்ச்சியை காண முடியவில்லை என்றும் ஏ.ஆர். ரஹ்மான் தான் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும் என எலைட் மக்களே எரிந்து விழுகின்றனர்.


Click it and Unblock the Notifications











