அசிங்கமா இல்லை.. இப்படியா ஆஸ்கரை டிரெண்ட் பண்ணுவீங்க.. ஆடையின்றி வந்த ஜான் சீனா.. விளாசும் ஃபேன்ஸ்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது தான் சினிமா உலகில் உச்சபட்சமான விருது விழாவாக பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால், அதுவெறும் அமெரிக்க படங்களுக்கான விருதுகளை வழங்கும் விழா மட்டுமே என்பது தனிக்கதை. ஆனால், ஆஸ்கருக்கு உலகில் உள்ள 175 நாடுகளும் சிறந்த படங்களை அனுப்பி வைக்கின்றன. அதில், இந்த ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த The Zone Of Interest திரைப்படம் ஆஸ்கர் வென்றது.
கடந்த 2022ம் ஆண்டு கிங் ரிச்சர்ட் படத்துக்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்ற வில் ஸ்மித் தனது மனைவி பற்றி நிகழ்ச்சி தொகுப்பாளர் கிறிஸ் ராக் கிண்டலாக பேசியதை பொறுத்துக் கொள்ள முடியாமல் மேடையேறி அடித்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், அது ஆஸ்கர் நிகழ்ச்சியை டிரெண்ட் செய்ய செய்யப்பட்ட ஒரு ஸ்டன்ட் என்கிற விமர்சனங்களும் கிளம்பின. இந்நிலையில், மீண்டும் அப்படியொரு ஜிம்மிக்ஸ் வேலையை ஆஸ்கர் விருது விழா குழு செய்திருப்பது கடும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.

ஆடையின்றி ஆஸ்கர் மேடையில்: டுவைன் தி ராக் ஜான்சன் போல WWEல் நடிச்சது போதும் ஹாலிவுட்டில் நடிக்கலாம் என களமிறங்கிய ஜான் சினா 96வது ஆஸ்கர் விருது விழா மேடையில் நிர்வாணமாக வந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. உலக நாடுகளில் உள்ள ரசிகர்கள் ஜான் சீனாவின் செயலையும் ஆஸ்கர் குழுவையும் கழுவி ஊற்றுகின்றனர்.
ஜான் சீனா ஏன் அப்படி வந்தார்?: புவர் திங்ஸ் படத்துக்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதுகளை வழங்குவதற்காகவே நடிகர் ஜான் சினா விருது அறிவிப்பை வைத்து தனது முக்கிய உறுப்பை மட்டும் மறைத்துக் கொண்டு வேறு எந்தவொரு ஆடையும் அணியாமல் மேடைக்கு வந்து அங்கேயே அதிரடியாக உடைகளை அணிந்துக் கொண்டு அந்த விருதினை அறிவித்தார்.

அசிங்கமா திட்டும் ரசிகர்கள்: இந்த பொழப்புக்கு என ஆரம்பித்து கண்ட கண்ட வார்த்தையில் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆஸ்கர் விருது விழா குழுவை திட்டி வருகின்றனர். அதே நேரத்தில் ஹாலிவுட் படங்களில் தேவையில்லாமல் நிர்வாண காட்சிகள் கமர்ஷியலுக்காக இடம்பெறுவது போல ஆஸ்கர் விருது விழாவையும் களங்கப்படுத்தி விட்டனர் என்றும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











