பிக்பாஸில் களைக்கட்டும் கள்ளக்காதல்.. புருஷன் வெளியே இருக்க இளைஞருடன் லூட்டியடிக்கும் பிரபல நடிகை!

மும்பை: இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் களைக்கட்டும் கள்ளக்காதலுக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 14வது சீசன் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி 140 நாட்கள் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 23 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

கொட்டித் தீர்த்த கனமழை

கொட்டித் தீர்த்த கனமழை

பிக்பாஸ் நிகழ்ச்சியை 11வது முறையாக பாலிவுட் தாதா என அழைக்கப்படும் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். செப்டம்பர் மாதமே தொடங்க வேண்டிய இந்த நிகழ்ச்சி மும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக ஒரு மாதம் தாமதமாக இந்த நிகழ்ச்சி தொடங்கியது.

சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை

சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை

பாலிவுட் பிரபலங்கள், இந்தி சின்னத்திரை பிரபலங்கள் என கலந்துக்கட்டி ஆரம்பித்த இந்த சீசனில் முதல் நாள் முதலே சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் உள்ளது. அந்த வகையில் ஏற்கனவே திருமணம் ஆன நடிகை ராக்கி சாவந்த் சக போட்டியாளரின் பெயரை உடம்பு முழுக்க எழுதி வைத்திருப்பது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

ஐ லவ் யூ அபினவ்

ஐ லவ் யூ அபினவ்

நடிகை ராக்கி சாவந்த் சக போட்டியாளரான அபினவ் சுக்லா பெயரை ஐ லவ் யூ அபினவ் என உடம்பு முழுக்க எழுதிக்கொண்டு வீடு முழுக்க சுற்றி வந்தார். ரெட் கலர் லிப்ஸ்ட்டிக்கால் ராக்கி உடம்பு முழுக்க எழுதியிருப்பதை பார்க்கவே அருவருப்பாக இருந்தது. ஹார்ட்டின் ஈமோஜிகளையும் வரைந்திருந்தார்.

டாட்டூ கூட வரைந்துகொள்வேன்

டாட்டூ கூட வரைந்துகொள்வேன்

தன் பெயரை ராக்கி சாவந்த் உடம்பு முழுக்க எழுதியிருப்பதை பார்த்து கடுப்பான அபினவ், என்ன இது என்று கேட்க, என்னுடைய க்ரேஸி லவ் என பதில் கூறினார் ராக்கி. மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் பேசிய ராக்கி, அபினவ் பெயரை உடம்பு முழுக்க டாட்டூவாக வரைந்து கொண்டு கூட தன்னுடைய காதல் எவ்வளவு உண்மையானது என்பதை காட்டுவேன் என்றார்.

இது என் உடம்பு

இது என் உடம்பு

மேலும் அபினவிடமும் என் காதலை பற்றி என்ன நினைக்கிறாய் என்றும் கேட்டார் ராக்கி சாவந்த். ஆனால் ராக்கி சாவந்தின் இந்த செயல்பாட்டை பார்த்த சக போட்டியாளரான நடிகை ரூபினா, கடும் கோபம் அடைந்துள்ளார். ராக்கியின் இந்த செயல் அவரைதான் தவறாக காட்டும் என்றார். அதற்கு பதில் கூறிய ராக்கி இது என் உடம்பு என்றார்.

சல்மான் கான் கண்டிக்க வேண்டும்

சல்மான் கான் கண்டிக்க வேண்டும்

இந்நிலையில் ராக்கி சாவந்தின் இந்த செயல்பாட்டையும் அபினவ் மீது அவர் கொண்டிருக்கும் காதலை பார்த்த ரசிகர்கள் ராக்கியின் கணவர் வெளியே காத்திருக்க இப்படி கள்ளக்காதல் கொள்வது சரியல்ல என கூறி வருகின்றனர். மேலும் இதுபோன்ற கள்ளக்காதல்களை சல்மான் கான் கண்டிக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X