எலிசபெத்துக்கு எரிச்சலை ஏற்படுத்துவதா..? குடும்ப செல்ஃபி வெளியிட்ட வனிதாவை விளாசும் நெட்டிசன்ஸ்!

By

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர் பாலுடன் வெளியிட்டுள்ள செல்ஃபி புகைப்படத்தை நெட்டிசன்கள் கிழித்து தொங்கவிட்டுள்ளனர்.

அடிக்கடி பரபரப்பில் இருப்பவர் நடிகை வனிதா விஜயகுமார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இன்னும் பரபரப்பானார்.

கடந்த 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்ட வனிதா, 2007 ஆம் வருடம் அவரை விவாகரத்து செய்தார்.

மூன்றாவது திருமணம்

மூன்றாவது திருமணம்

பிறகு ஆனந்த் ஜெயராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்ட வனிதா, 2012 ஆம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார். 8 ஆண்டுகள் கழித்து கடந்த மாதம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், தன்னை முறையாக விவாகரத்து செய்யாமல் 2 வது திருமணம் செய்துகொண்டதாக புகார் கூறியிருந்தார்.

அவதூறாகப் பேசினார்

அவதூறாகப் பேசினார்

இது சமூக வலைதளத்தில் பரபரப்பானது. பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவாக பலர் கருத்துத் தெரிவித்தனர். சினிமா தயாரிப்பாளர் ரவீந்திரன், யூடியூப் பிரபலம் சூரியா தேவி ஆகியோர் வனிதாவின் திருமணம் குறித்து கருத்துத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சூரியா தேவி மீது அவதூறாகப் பேசினார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகை வனிதா, போரூர் காவல் நிலையத்தில், 7 ஆம் தேதி புகார் அளித்தார்.

மகளிர் காவல் நிலையம்

மகளிர் காவல் நிலையம்

அந்தப் பெண் கஞ்சா வியாபாரம் செய்து வருவதாகவும் அவருக்கு பலருடன் தொடர்பு இருக்கிறது என்றும் பரபரப்பு புகார் தெரிவித்தார் வனிதா. இந்நிலையில், தன்னை பற்றி அவதுாறாக பேசிய நடிகை வனிதா மீது, சூர்யா தேவி, புகார் அளித்தார். இரண்டு புகார்களும் வடபழநி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. போலீசார் இதுபற்றி விசாரித்து வரும் நிலையில், அடுத்த பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஆத்திரத்தை தூண்டுவதாக

ஆத்திரத்தை தூண்டுவதாக

நடிகை வனிதா தனது ட்விட்டரில் புதிய செல்பி ஸ்டில் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், தனது மகள்கள் மற்றும் பீட்டர் பாலுடன் இருக்கிறார் வனிதா. இதைக் கண்ட நெட்டிசன்ஸ் கண்டபடி, திட்டியுள்ளனர். 'உங்களின் ஒவ்வொரு செயலும் பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலனுக்கு எரிச்சலையும் ஆத்திரத்தையும் தூண்டுவதாக இருக்கிறது. இதை வேண்டும் என்றே செய்திருக்கிறீர்கள். இதற்கான தண்டனையை அனுபவிப்பீர்கள்' என்று ஒரு நெட்டிசன் கூறியுள்ளார்.

Recommended Video

Vanitha Vijaykumar முதல் சாந்தமான நேர்காணல்
யோசிச்சு பாருங்க

யோசிச்சு பாருங்க

மற்றொருவர், உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையையும் நீங்கள் கெடுக்குறீர்கள் என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார். இன்னொரு பெண், 'எதையும் போஸ்ட் செய்யும் முன் யோசிச்சு பாருங்க. பீட்டர்பாலுக்கும் சிறுவயதில் ஒரு மகள் இருக்கிறார். அவர்கள் பெற்றோர் விவகாரத்தில், அந்த மகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று தெரிவித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X