ஆபிஸ் பாய் வேலை பாக்குர ரியோ சவாலான போட்டியாளரா? உங்க பார்ஷியாலிட்டி பச்சையா தெரியுது பிக்பாஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரியோவுக்கு சவாலான போட்டியாளர் என்ற பட்டம் கொடுத்துள்ள விஜய் டிவியை நெட்டிசன்கள் கிழித்து தொங்கவிட்டுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று வைல்டு கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்தார் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் தொகுப்பாளரான அர்ச்சனா.
வந்த வேகத்தில் பலரையும் பங்கமாக கலாய்த்தார் அர்ச்சனா. அவரது பிகேவிங் கொஞ்சம் ஓவர் ஆக்டிங்காகதான் இருந்தது.

சிம்பிளி வேஸ்ட்
தொடர்ந்து போட்டியாளர்கள் மத்தியில் மக்களுக்கு என்ன மதிப்பு உள்ளது? எப்படி பேச்சு உள்ளது? என மக்களின் பிரதிநிதியாக சொல்கிறேன் என போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டத்தை கொடுத்தார். எடுத்த எடுப்பிலேயே பாலாவை சிம்பிளி வேஸ்ட் என்றார்.

ஷோகேஸ் பொம்மைகள்
அதேபோல் ஆரி மற்றும் சனம் ஷெட்டியை நமத்துப் போன பட்டாசு என்றார். ஜித்தன் ரமேஷையும் அறந்தாங்கி நிஷாவையும் ஆமா சாமி என்றார். சம்யுக்தாவையும் சோம சேகரையும் ஷோகேஸ் பொம்மைகள் என்றார். வேல்முருகனையும் ஷிவானியையும் அட்மாஸ்ஃபியர் ஆர்ட்டிஸ்ட் என்று பட்டம் கொடுத்தார்.

கிழித்து தொங்கவிட்ட நெட்டிசன்ஸ்
ஆனால் விஜய் டிவி புராடெக்டுகளான ரியோ ராஜையும் ரம்யா பாண்டியனையும் சவாலான போட்டியாளர்கள் என கூறி போர்டை மாட்டிவிட்டார் அர்ச்சனா. அதனை பார்த்த ரசிகர்கள் கொதித்து போயுள்ளனர். விஜய் டிவியையும் நார் நாராய் கிழித்து தொங்கவிட்டுள்ளனர்.

எதை கிழித்தார்?
ரம்யா பாண்டியனை கூட சவாலான போட்டியாளர் என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ரியோ என்னத்த சவாலாக செய்தார். எதை கிழித்தார் என அவரை சவாலான போட்டியாளர் என கூறுகிறீர்கள். சவாலான போட்டியாளர் என்றால் சுரேஷ் சக்கவர்த்திதான் என கூறியுள்ளனர்.

ரியோவோட டீலிங்கா
உங்கள் சேனலை சேர்ந்தவர்கள் என்பதால் இப்படி ஓர வஞ்சனையுடன் நடந்து கொள்கிறீர்களா? அல்லது யாரும் பிக்பாஸுக்கு வராததால் ரியோவுடன் டீலிங் வைத்துள்ளீர்களா என்றும் கண்டபடி விமர்சித்துள்ளனர். இதற்கு ஏன் மற்ற போட்டியாளர்களை அழைத்தீர்கள் 100 நாட்கள் ரியோவை மட்டும் வைத்து டைட்டில் வின்னர் பட்டத்தை கொடுத்திருக்கலாமே என்றும் விளாசியுள்ளனர்.

நியாயம் வேண்டாமா?
ரியோவுக்கு சவாலான போட்டியாளர் பட்டம் கொடுக்கப்பட்டதை பார்த்த இந்த நெட்டிசன், சவாலான போட்டியாளராமா இவன் என்ன சவால் செய்தான்டா ஏன் மா அர்ச்சனா பொய் சொல்றன்னாலும் ஒரு நியாயம் வேண்டாமா என்று கேட்டுள்ளார்.

பெல் அடிச்சா போதும்
மற்றொரு நெட்டிசனான இவர் ரியோ ஆபிஸ் பாய் வேலை பார்க்கிறார்.. பெல் அடிச்சா போதும் உடனே ஸ்டோர் ரூமுக்கு ஓடி போய் என்ன வச்சுருக்காங்களோ எடுத்து கொண்டு வருகிறார்... அதான் சவாலான போட்டியாளரா என்று கேட்டுள்ளார்.

சினேகனுக்கு சவாலானவர்
மற்றொரு நெட்டிசனான இவர், ரியோவுக்கு சவாலான போட்டியாளர் பட்டம் கொடுத்ததை கடுமையாக விளாசியிருக்கிறார். ரியோ சவாலான போட்டியாளர் தான் ஆனால் சினேகனுக்கு சவாலான போட்டியாளர் கட்டிப்பிடிப்பதில்.... மானங்கெட்ட ரியோ கடுமையாக விமர்சித்துள்ளார்.

முடியும் வரை
ரியோவுக்கு சவாலான போட்டியாளர் என்ற பட்டத்தை கொடுத்த விஜய் டிவியை கடுமையாக விளாசியுள்ளார் இந்த நெட்டிசன். விஜய் டிவியின் எச்சத்தனம் இது, ரியோ கண்டிப்பா ஃபைனல் முடியும் வரை வருவான் என விளாசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











