Don't Miss!
- News
வீல் சேர் கூட வைத்திருக்க மாட்டீர்களா.. ட்வீட் போட்டு விமர்சித்த குஷ்பு! மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா
- Lifestyle
வாஸ்துப்படி, இவற்றை வீட்டின் மாடிப்படிக்கு கீழே வெக்காதீங்க... இல்லன்னா அது உங்க முன்னேற்றத்தை தடுக்கும்...
- Sports
ரொம்ப சந்தோஷப்படாதீங்க.. அதிர்ஷ்டத்தால் நியூசி,யை இந்தியா வீழ்த்தியதா??.. பாக். சீனியர் விளாசல்!
- Automobiles
இவ்ளோ கம்மியான விலைக்கு இப்படி ஒரு ஸ்கூட்டரா! ஹோண்டா ஆக்டிவாவின் ஆட்டத்தை முடிக்க போகும் ஹீரோ தயாரிப்பு!
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ரன்வீரை காப்பியடித்த விஷ்ணு விஷால்.. கோலிவுட்டிலும் பரவிய நிர்வாண டிரெண்டிங்.. ரசிகர்கள் விளாசல்!
சென்னை: நானும் இந்த டிரெண்டிங்கில் சேர்ந்து கொள்கிறேன் என ரன்வீர் சிங்கை காப்பியடித்து நிர்வாண போட்டோக்களை போட்டிருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்.
படுக்கையில் உள்ளாடை கூட அணியாமல் படு ஆபாசமாக போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் ராட்சசன் நடிகர்.
மேலும், அந்த போட்டோக்களை யார் எடுத்தார்கள் என்பதையும் ரிவீல் செய்துள்ள நிலையில், அவரது ட்வீட்டுக்கு கீழே பலரும் கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டி விஷ்ணு விஷாலை வெளுத்து வாங்கி வருகின்றனர்.
சூர்யாதான்
எல்லாத்துக்கும்
காரணம்..
கார்கி
சக்சஸ்
மீட்ல
சாய்
பல்லவி
பகிர்ந்த
தகவல்!

நடிகைகளை மிஞ்சிய ஆபாசம்
பிகினி உடைகளில் படு கவர்ச்சியாக நடிகைகள் போட்டோ போட்டாலே பலரும் ட்ரோல் செய்தும் திட்டியும் வரும் நிலையில், நடிகைகளை மிஞ்சிய ஆபாசத்திற்கு ரன்வீர் சிங் சென்று எந்தவொரு உடையோ உள்ளாடையோ அணியாமல் முழு நிர்வாணமாக அந்த இடத்தை மட்டும் மறைத்தபடி போஸ் கொடுத்து ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கி எடுத்து விட்டார். பேப்பர் மேகஸினுக்காக அவர் இப்படியொரு போட்டோஷூட்டை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

நிர்வாணமாக விஷ்ணு விஷால்
இந்நிலையில், தற்போது திடீரென தனது ட்விட்டர் பக்கத்தில் உள்ளாடை கூட அணியாமல் படுக்கையில் படுத்தபடி மோசமான போட்டோஷூட்டை நடத்தி இருக்கிறார் விஷ்ணு விஷால், அதையெல்லாம் அப்படியே ஷேர் செய்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்துள்ளார் எஃப்.ஐ.ஆர் நடிகர் விஷ்ணு விஷால். அதிலும் பெட்ஷிட்டை வைத்து அதை மட்டும் மறைத்தபடி ரொம்பவே கொடூரமாக போஸ் கொடுத்து ஆபாசத்தின் உச்சிக்கே சென்று விட்டார்.

டிரெண்டிங்கில் இணைந்து விட்டேன்
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், டோலிவுட் நடிகர் விஜய் தேவரகொண்டா என சமீபத்தில் பலரும் நிர்வாணமாக போட்டோக்களை போடுவதை டிரெண்ட் ஆக்கி வரும் நிலையில், அந்த டிரெண்டிங்கில் தானும் இணைந்து விட்டேன் என விஷ்ணு விஷால் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் கேப்ஷன் கொடுத்திருப்பது ரசிகர்களை உச்சகட்ட கோபத்திற்கு ஆழ்த்தி உள்ளது.

மனைவி எடுத்தது
மேலும், இந்த நிர்வாண புகைப்படங்களை எடுத்தது வேறு எந்த போட்டோகிராபரும் இல்லை. தனது மனைவி ஜுவாலா கட்டா தான் என நடிகர் விஷ்ணு விஷால் போட்டுள்ள ட்வீட் ரசிகர்களை மேலும், அதிர்ச்சியடைய செய்துள்ளது. தமிழ் சினிமாவில் இருந்து கொண்டு ஏன் இப்படி எல்லை மீறி போட்டோஷூட் நடத்தி உங்க பெயரை கெடுத்துக் கொள்கிறீர் என ரசிகர்கள் விஷ்ணு விஷாலின் செயலால் அதிருப்தி அடைந்துள்ளனர்.

லைட்ட திருப்பாத
வடிவேலுவின் காமெடி வீடியோவை போட்டு.. லைட்ட திருப்பாத என கிண்டல் செய்து வருகின்றனர். விஜய்தேவரகொண்டா லைகர் படத்துக்கு போஸ்டரே அப்படி விடும் போது எத்தனை ஹீரோயின்கள் 'வாவ்' போட்டனர். ரன்வீர் சிங்கை பார்த்து ஜொள்ளு விட்டதன் விளைவு தான் தற்போது விஷ்ணு விஷால் இப்படி நிர்வாணமாக போஸ் கொடுக்க காரணம் என்றும், இது இப்படியே ஒரு சவாலாக டிரெண்டானால் பார்ப்பவர்களின் நிலைமை படு மோசமாகி விடும் என கலாய்த்து வருகின்றனர்.

ஷால் போடுங்க தோழர்
ஆடை அணியாமல் படுக்கையில் படுத்தபடி அரை நிர்வாணமாக போஸ் கொடுத்த நடிகர் விஷ்ணு விஷாலை பல ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். விஜய் தேவரகொண்டாவுக்கும், ரன்வீர் சிங்குக்கும் போட்டோஷாப்பில் டிரெஸ் போட்டு விட்ட ரசிகர்கள், இப்போ, விஷ்ணு விஷாலுக்கும் டிரெஸ் போட்டு விட்டு, ஷால் போடுங்க தோழர் என பங்கம் பண்ணி வருகின்றனர்.
Recommended Video

என்ன கருமம் டா
நடிகர் விஷ்ணு விஷால் திடீரென சமூக வலைதளங்களில் டிரெண்டாவதற்காக இப்படி எல்லை மீறிய போட்டோக்களை வெளியிட்டு உள்ள நிலையில், என்ன கருமம்டா இதெல்லாம் என ரசிகர்கள் ஏகப்பட்ட ட்ரொல் மீம்களை போட்டுத் தாக்கி வருகின்றனர். நடிகர் விஷ்ணு விஷால் இப்படி போல்டாக போட்டோஷூட் நடத்தியதை அவரது ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.