Lubber Pandhu: அட இதை கவனிச்சீங்களா? ஹரீஸ் கல்யாணை விட அவங்க மாமியாருக்கு வயசு கம்மிங்க..!

சென்னை: நடிகர் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்டோர் கதாநாயகர்களாக நடித்து வெளியான படம் லப்பர் பந்து. இந்தப் படம் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. முழுக்க முழுக்க கிராமப்புற கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் பெரும் வெற்றிப் படமாக மாறியது. குறிப்பாக ஒரு படம் இளைஞர்கள் பட்டாளத்தைக் கடந்து குடும்ப ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுவிட்டால், அந்தப் படம் பெரும் வெற்றி அடைந்துவிடும். அந்த வகையில் லப்பர் பந்து படம் பெரும் வெற்றிப் படமாக மாறியது. இப்படம் தீபாவளியன்று முதல் ஓடிடி தளத்திலும் ஸ்ட்ரீம் ஆகி வருகின்றது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள லப்பர் பந்து திரைப்படம் கிராமங்களில் விளையாடப்படும் லப்பர் பந்து கிரிக்கெட்டினை மையமாகக் கொண்ட கதை. இப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழரசன் பச்சமுத்து அறிமுகமாகின்றார். லப்பர் பந்து திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். சான் ரோல்டன் அட்டகாசமாக இசை அமைத்துள்ளார். படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன நாளில் இருந்து ஓடிடியில் தற்போது ஸ்ட்ரீம் ஆகிக்கொண்டு உள்ளது வரை பாராட்டு மழையில் நனைந்து கொண்டு உள்ளது.

lubber pandhu harish kalyan swasika vijay

படம் விமர்சன ரீதியாக வெற்றியை எட்டியது மட்டும் இல்லாமல், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றிப்படமாக மாறியது. படம் குறித்து படக்குழு தரப்பில் இருந்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் வெளிவந்து கொண்டே இருந்ததால், ரசிகர்களுக்கு படத்தினை தியேட்டரில் பார்க்கும் ஆர்வம் அதிகரித்தது. ஹரீஸ் கல்யாண் அன்பு கதாபாத்திரத்திலும், அட்டக்கத்தி தினேஷ் கெத்து கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். படத்தில் கதாநாயகிகளுக்கு என்பதைக் காட்டிலும் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஈகோ: படம் முழுக்க தினேஷ் மற்றும் ஹரீஸ் கல்யாணுக்கு இடையிலான ஈகோ பிரச்னையை மட்டும் காட்டி வழக்கமான ஹீரோ சென்ட்ரிக் படமாக மட்டும் இல்லாமல், படத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நல்ல அழுத்தம் திருத்தமான திரைக்கதை அமைத்து படம் பார்த்த அனைவருக்கும் திருப்திகரமான எண்ணத்தை உருவாக்கிவிட்டனர்.

lubber pandhu harish kalyan swasika vijay

வெற்றி: தினேஷ் கதாபாத்திரத்திற்கு ஒலிக்கப்படும் விஜயகாந்த்தின் பொட்டு வெச்ச தங்கக் குடம் பாடலுக்கு திரையரங்கில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பேட்டி ஒன்றில் பேசும்போது, லப்பர் பந்து படத்தின் கதையை தான் முதலில் எழுதவில்லை என்றும், இது அவசரகதியில் எழுதிய கதை என்றும் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து தெரிவித்தார். இது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. மேலும், படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றிப் படமாக மாறியதால், அடுத்து, நடிகர் சிம்புவுடனும் படம் இயக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது.

lubber pandhu harish kalyan swasika vijay

வயது: படம் ஏற்கனவே வெற்றிப்படமாக மாறியதால், படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் படத்தின் கதாநாயகன் ஹரீஸ் கல்யாணின் வயதையும் அவரது மாமியாராக நடித்த அதாவது அட்டகத்தி தினேஷ்ஷின் மனைவியாக நடித்த ஸ்வாசிகா விஜய்யின் வயதையும் இணையத்தில் தேடி எடுத்த இணைய வாசிகள் அதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதாவது ஹரீஸ் கல்யாணுக்கு வயது 34, அதேபோல் ஸ்வாசிகாவுக்கு வயது 32. இதனைப் பார்த்த ரசிகர்கள் மருமகனைவிட மாமியாருக்கு வயது குறைவு என ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

lubber pandhu harish kalyan swasika vijay

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X