பிக்பாஸுக்கு பிறகு.. இப்படி ஒரு நிலைமையா?முகத்தைக் கூட காட்டமுடியாத விக்ரமன்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமான விக்ரமன் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமாவளவன் முன்னிலையில் விசிகவில் இணைந்தார். இவர் மீது பெண் வழக்கறிஞர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் 13 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதனை விசாரணைக்காக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரான விக்ரம் முகத்தை மூடி கொண்டு சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவரது ரசிகர்கள் உங்களுக்கு இப்படி ஒரு நிலைமையாக என்றும், நிச்சயம் அறம் வெல்லும் என அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஊடகத்தில் விவாத நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்த விக்ரமன். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் துணை செய்தித் தொடர்பாளராகவும் பதவியும் வகித்து வந்தார். இவர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்டார். ஒரு அரசியல் பிரமுகர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது இதுவே முதன்முறையாகும்.

Fans Support Bigg Boss Season 6 Contestant Vikraman

இந்த நிகழ்ச்சியில் இருந்த பெண்களிடம் அவர் பேசியவிதம், அசீம் வரம்பு மீறி பேசிய போதும் அமைதியாக இருந்தது ரசிகர்களுக்கு பிடித்துப் போனதால், இவருக்கு என்று தனி ரசிகர்கள் இருந்ததால், அந்த நிகழ்ச்சியில் இவர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அசீம் வெற்றி பெற்றதால், இணையத்தில் பல விதமான கருத்து மோதல்கள் எழுந்தன.

சர்ச்சையில் சிக்கினார்: அதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன் விக்ரமன் சர்ச்சையில் சிக்கினார். அதாவது, சென்னை பெருங்குடியை சேர்ந்தவர் கிருபா முனுசாமி இவர் வழக்கறிஞராக இருந்து வருகிறார். இவர் லண்டனில் ஆய்வுபட்டமும் பெற்றுள்ளார். இவர் கடந்த ஜூலை மாதம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பிக்பாஸ் பிரபலம் விக்ரமன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை செய்தித் தொடர்பாளரும், பிக்பாஸ் பிரபலமுமான விக்ரமனும் நானும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நெருக்கமாக பழகி வந்தோம். விலை உயர்ந்த லேப்டாப் மற்றும் மொபைல் அவருக்கு வாங்கி கொடுத்து இருக்கிறேன். ஆனால் அவர், என்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றினார். சாதி ரீதியாக பேசி துன்புறுத்தினார் என புகார் கூறியிருந்தார்.

ஏமாற்றி விட்டார்: அதன் பின் அந்த பெண் கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் துறையில் புகார் அளித்தார். அதில், என்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி என்னிடம் 13.7 லட்சம் வரை பணம் பெற்றார். அதில் 12 லட்சம் வரை திருப்பி கொடுத்தார். இதுவரை 1.7 லட்சம் கொடுக்கவில்லை எனவே விக்ரமன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து எனக்கு நீதி வழங்க வேண்டும் என புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து காவல் துறை விக்ரமன் மீது கற்பழிப்பு, மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஆஜரானார். அப்போது 13 பிரிவுகளின் கீழ் பதிவான வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதில், என் மீது வேண்டுமென்று அவதூறு பரப்பியதாகவும், என் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்கு எப்போது கூப்பிட்டாலும் ஆஜராக தயார் என கூறியதாக கூறப்படுகிறது.

அறம் வெல்லுமா? விசாரணை முடித்து வெளியில் வந்த விக்ரமன் செய்தியாளர் அவரிடம் கேள்வி எழுப்பவும், படம் பிடிக்கவும் முயன்றுள்ளனர். அப்போது கேமராவை கண்டதும் காரில் ஓடி ஏறி கொண்டு முகத்தை கையில் வைத்திருந்த கோப்புகளால் மூடிக்கொண்டு காரில் வேகமாக கிளம்பினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், விக்ரமனின் தீவிர ஆதரவாளர்கள் உங்களுக்கு இப்படி ஒரு நிலைமையா என்றும், நிச்சயம் அறம் வெல்லும் என்றும் கருத்துக்களை பகிர்ந்து அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X