westandwithdhanush:சம்பள பிரச்சினை... தனுஷுக்காக தானா சேர்ந்த கூட்டம்... நாளுக்குநாள் பெருகும் ஆதரவு
தனுஷுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் #westandwithdhanush எனும் ஹேஷ்டேகை டிரெண்டிங்காக்கி வருகின்றனர்.
சென்னை: தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு விவகாரத்தில் நடிகர் தனுஷுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது.
அசுரன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் தனுஷ், பல தயாரிப்பாளர்கள் தனக்கு சம்பளம் தராமல் ஏமாற்றிவிட்டதாகக் கூறினார். இதற்கு தயாரிப்பாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தனுஷை வைத்து யாரும் படம் தயாரிக்கக்கூடாது என ஏ.எல்.அழகப்பன் உள்ளிட்டோர் குரல் கொடுத்தனர்.
இதையடுத்து தனுஷ் ரசிகர்கள், #westandwithdhanush எனும் ஹேஷ்டேகை டிவிட்டரில் உலகளவில் டிரெண்டாக்கினர். தனுஷுக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

தவறில்லை
"தயாரிப்பாளர்கள் தன்னை ஏமாற்றியதாக தனுஷ் கூறியதில் எந்த தவறும் இல்லை. அவருடைய சொந்த அனுபவத்தில் இருந்து அதனை தெரிவித்துள்ளார். அவரும் ஒரு தயாரிப்பாளர் தான் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்" என தனுஷ் ரசிகர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
விஜய் ரசிகர்கள்
தனுஷுக்கு ஆதரவாக நடிவர் விஜய்யின் ரசிகர்களும் குரல் கொடுத்து வருகின்றனர். "எந்த பிரச்சினை என்றாலும் உங்களுக்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள் நிற்பார்கள்", என இவர் தெரிவித்துள்ளார்.
ஒற்றுமை
"ரத்தத்தால் வேறுபட்டோம், உருவத்தால் வேறுபட்டோம், குணத்தால் வேறுபட்டோம், ஆனால் தனுஷ் என்ற ஒற்றை சொல்லில் ஒன்றுபட்டோம். நமது ஒற்றுமையை காட்ட இது தான் சரியான தருணம்", என இவர் தெரிவித்துள்ளார்.
ஆதரவு
"உன்னை பற்றி யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை. உனக்காக நாங்கள் இருக்கிறோம் தலைவா. உன்னை வீழ்ச்சியடையவிட மாட்டோம்", என இந்த ரசிகர் குறிப்பிட்டுள்ளார். இப்படி நாளுக்கு நாள் தனுஷூக்கு ஆதரவு பெருகி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











