இந்துக் கடவுள்களை அவமதித்தாரா விஜய்சேதுபதி.. குவியும் ஆதரவு.. டிரெண்டாகும் #wesupportvijaysethupathi
சென்னை: இந்துக் கடவுள்களை அவமதித்து நடிகர் விஜய்சேதுபதி பேசவில்லை என்றும், கிரேஸி மோகன் பேசியதை நினைவு கூர்ந்ததை சிலர் திட்டமிட்டு எடிட் செய்து தற்போது அவர் மீது பழி போட்டு வருகின்றனர் என விஜய்சேதுபதியின் ரசிகர்கள் #wesupportvijaysethupathi என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
Recommended Video
நடிகர் விஜய்சேதுபதி இந்துக் கடவுள்களை அவமதித்துப் பேசியதாக அவர் மீது இந்து மக்கள் முன்னணி சார்பில் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
சன் டிவியில் ஒளிபரப்பான நம்ம ஊரு ஹீரோ நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி பேசியதை இந்த லாக்டவுன் நேரத்தில் சிலர் கிண்டியிருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன.
கிரேஸி மோகன் பேச்சு
மறைந்த காமெடி நடிகர் கிரேஸி மோகன் நீண்ட நாட்களுக்கு முன்னர் டிவி பேட்டி ஒன்றில் பேசியதைத் தான் நடிகர் விஜய்சேதுபதி அந்த நிகழ்ச்சியில் நினைவு கூர்ந்தார் என்றும், அதனை விஜய்சேதுபதியே கடவுளுக்கு எதிராக பேசியதாக சிலர் எடிட் செய்து, தற்போது அவர் மீது பழி சுமத்தி வருகின்றனர். இதுவும் ஒரு லாக்டவுன் போரிங் என விஜய்சேதுபதி ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

விஜய் ரசிகர்கள் ஆதரவு
சமீபத்தில் தஞ்சாவூர் பெரிய கோயில் குறித்து நடிகை ஜோதிகா சர்ச்சையாக பேசினார் என சிலர் பொங்கிய நிலையில், நடிகர் சூர்யாவின் கடிதத்துக்கு விஜய்சேதுபதி ஆதரவு தெரிவித்து இருந்தார். இந்நிலையில், அடுத்ததாக விஜய்சேதுபதி முன்பு பேசிய விசயத்தை கண்டுபிடித்து பிரச்சனை செய்ய ஆரம்பித்துள்ளனர் என விஜய்சேதுபதி ரசிகர்கள் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வரும் நிலையில், விஜய் ரசிகர்களும் ஆதரவு கரம் நீட்டியுள்ளனர்.

சிம்பு ரசிகர்கள்
நடிகர் விஜய்சேதுபதி மீது எந்தவொரு தவறும் இல்லை என்றும், காழ்புணர்ச்சி காரணமாகவே இப்படியெல்லாம் அவதூறு பரப்புகின்றனர் என விஜய்சேதுபதி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்த நிலையில், டிரெண்டாகி வரும் ஹாஷ்டேக்குக்கு சிம்பு ரசிகர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்

சூர்யா ரசிகர்கள்
சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பிரச்சனை வந்த போது நடிகர் விஜய்சேதுபதி, சூர்யா சொன்ன மனிதம் தான் முக்கியம் என்ற கருத்தை விஜய்சேதுபதி ஆதரித்து இருந்தார். இந்நிலையில், தற்போது சூர்யா ரசிகர்கள் விஜய்சேதுபதியை டார்கெட் செய்துள்ள பிரச்சனைக்கு எதிராக அணி திரண்டு வருகின்றனர்.

இக்னோர் நெகட்டிவிட்டி
மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் மனுஷனை மனுஷன் தான் காப்பாத்தணும்.. மேல இருந்து எல்லாம் ஒண்ணும் வராது என மனிதம் தான் முக்கியம் என்பதனை விஜய்சேதுபதி வெளிப்படையாக பேசியிருந்தார். விஜய் ரசிகர்கள், இப்படி எல்லாம் பல சோதனைகள் வரும் இக்னோர் நெகட்டிவிட்டி நண்பா எனவும் டிவீட்களை பதிவிட்டு மக்கள் செல்வனுக்கு ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











