அந்த காமெடி நடிகையா இது? நம்பவே முடியலையே.. ஒல்லி பெல்லி லுக்கில் வேற மாதிரி இருக்காரே!
சென்னை: பிரபல காமெடி நடிகை உடல் இளைத்து வெளியிட்டுள்ள புகைப்படங்களை கண்டு நெட்டிசன்ஸ் ஆச்சரியமடைந்துள்ளனர்.
கவுதம் மேனன் இயக்கிய, நீதானே என் பொன்வசந்தம் என்ற படம் மூலம் அறிமுகமானார் வித்யுலேகா.
பிரபல நடிகர் மோகன் ராமின் மகளான இவர், அதில் சமந்தாவின் தோழியாக நடித்திருந்தார்.

அஜித்தின் வீரம்
தொடர்ந்து, தீயா வேலை செய்யணும் குமாரு, விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம், வேதாளம், தனுஷின் பவர் பாண்டி, பஞ்சுமிட்டாய் உட்பட பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி ஹீரோ படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகிறார்.

சஞ்சய் வத்வானி
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் வித்யுலேகாவுக்கு தொழிலதிபர் சஞ்சய் வத்வானியுடன் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த விழாவில் இரண்டு குடும்பத்தினரின் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இதுதொடர்பான புகைப்படங்களை வித்யுலேகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

நெருங்கிய உறவினர்கள்
இதுபற்றி அவர், 'நிச்சயதார்த்த விழாவில், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். கொரோனா காலகட்டம் என்பதால், இப்போதைக்கு தெரியபடுத்த வேண்டாம் என்று நினைத்தோம். ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருக்கட்டும் என்று அமைதியாக இருந்தோம். கொரோனா நிலைமை சரியான பிறகு திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறி இருந்தார்.

ஸ்லிம் ஆனார்
இந்நிலையில், தனது உடை எடையை குறைத்து ஸ்லிம்மாகி இருக்கிறார் வித்யுலேகா. 86.5 கிலோவில் இருந்து 65.3 கிலோவாக குறைந்துள்ள அவர் அதற்காகக் கடுமையான பயிற்சி எடுத்துள்ளார். இதையடுத்து தெலுங்கு படம் ஒன்றுக்காக, ஒல்லி பெல்லி தோற்றத்தில் போலீஸ் டிரெஸ்சில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நம்ப முடியாத மாற்றம்
டூட்டிக்கு ரெடியாயிட்டேன் என்று கேப்ஷனில் குறிப்பிட்டுள்ள அவரை ரசிகர்கள் கண்டபடி வாழ்த்தியுள்ளனர். இது நம்ப முடியாத மாற்றம் என்றும் எப்படி இது நடந்தது என்றும் பலர் ஆச்சரியமாக கேட்டுள்ளனர். இந்த கேரக்டரில் நடிக்கும் படத்தை பார்க்க ஆர்வமாக இருப்பதாக சிலர் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











