‘ஜெயிலர்‘ படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு.. ரஜினியை சுற்றி வளைத்த ரசிகர்கள் !
சென்னை : ஜெயிலர் படப்பிடிப்பு தளத்திற்கு ரஜினியின் கார் வந்த போது, ரசிகர்கள் அவரை சுற்றி வளைத்து செல்ஃபி எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படம் ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதால், இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இப்படத்தில் மோகன்லால், ஜாக்கி ஷெராஃப்,கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு ஆகியோர் நடித்து வருகின்றனர்.
ராஜஸ்தானில் படப்பிடிப்பு
ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக ரஜினிகாந்த் ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் சென்றுள்ளார். இதையடுத்து ரஜினி காந்த் தங்கும் ஓட்டலின் ஊழியர்கள் அவருக்கு லுங்கி டான்ஸ் பாடலுக்கு நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை பார்த்த ரஜினி திகைத்துப்போனார்.
காரை சுற்றிவளைத்த ரசிகர்கள்
தற்போது, ஜெயிலர் படப்பிடிப்பு தளத்துக்கு ரஜினிகாந்தின் கார் வந்தபோது அந்த காரை ரசிகர்கள் சுற்றி வளைத்துக்கொண்டனர். ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுக்க முயற்சித்தனர். ஆனால், ரஜினி காருக்குள் அமர்ந்து இருந்ததால் ரசிகர்களால் செல்ஃபி எடுக்க முடியவில்லை. அப்போது, ஒரு ரசிகர் தலைவா, நாங்கள் மதுரையிலிருந்து வந்திருக்கிறோம் என்று கூறியபோது, ரஜினி கார் கண்ணாடியை லேசாக இறக்கிய கை அசைத்தார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது டிரெண்டாகி வருகிறது.
36 ஆண்டுகளுக்கு பிறகு
ஜெயிலர் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் இணைந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு நேற்று போஸ்டருடன் வெளியிட்டது. ஜாக்கி ஷெராப், விஜய் நடித்த பிகில் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். ரஜினியும் ஜாக்கி ஷெராஃப்பும் 1987ம் ஆண்டு ஒரு இந்தி படத்தில் இணைந்து நடித்தனர். தற்போது 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஜெயிலர் படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர்.
5 மொழிகளில்
நெல்சனின் முந்தைய படங்களைப் போல் இல்லாமல் ஜெயிலர் திரைப்படம் அதிரடி ஆக்ஷன்படமாக உருவாகி உள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம்,மலையாளம் என 5 மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக வெளியாக உள்ளதால், அனைத்து மொழி ரசிகர்களையும் கவரும் வகையில் 5 மொழிகளில் உள்ள முக்கிய நட்சத்திரத்தில் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











