Suriya: மும்பையில் சூர்யாவை சுத்துப்போட்ட ரசிகர்கள்.. என்ன நடந்துச்சுனு தெரியுமா? விவரம் உள்ளே!

மும்பை: நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளார். ஒரு கட்டம் வரை முழுக்க முழுக்க கமர்ஷியல் படங்களில் மட்டும் நடித்து வந்த சூர்யா, அதன் பின்னர் கமர்ஷியல் மற்றும் ஆர்ட் ஃபிலிம்களிலும் கவனம் செலுத்தினார். அதனால் தமிழ்நாட்டினைக் கடந்து இந்தியா முழுவதும் அறியப்படும் நடிகராக மாறினார். இன்றைக்கு தமிழ் நாட்டினைக் கடந்து மற்ற மாநிலங்களிலும் பிசினஸ் இருக்கக்கூடிய வெகு சில தமிழ் நடிகர்களில் இவரும் ஒருவர். அதனால்தான் தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வருகின்றார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள மும்பை சென்றிருந்தார். அங்கு அவர் வருவதை அறிந்த ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். அது தொடர்பாக இந்தத் தொகுப்பில் காணலாம்.

kanguva suriya suriya fans

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரை திரையில் பார்த்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. கடைசியாக கடந்த 2022ஆம் ஆண்டு ஜுன் மாதம் வெளியான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 5 நிமிடங்கள் மட்டுமே அந்த படத்தில் நடித்திருந்தாலும், அந்த படம் குறித்து உறையாடும்போதெல்லாம் தவிர்க்க முடியாத கதாபாத்திரமாக அது அமைந்தது. இவரது நடிப்பில் படம் ரிலீஸ் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகின்ற நிலையில் சூர்யாவின் ரசிகர்கள் எக்கச்சக்க ஏக்கத்தில் இருக்கின்றனர்.

kanguva suriya suriya fans

இவரது கங்குவா படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு, அதன் பின்னர் நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் என தள்ளிப்போனது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி ரிலீஸுக்கு தயாராக உள்ள கங்குவா படம் சூர்யாவின் 42வது படமாகும். அதேபோல் இவரது 44வது படமான கார்த்திக் சுப்புரா இயக்கத்தில் உருவாகியுள்ள அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த படத்தின் படப்பிடிப்பும் முடிந்து விட்டது. இப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது.

kanguva suriya suriya fans

சூர்யா 45: இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சூர்யாவின் 45வது படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதாவது இயக்குநர் மற்றும் நடிகர் ஆ.ஜே. பாலஜியின் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் அறிவிப்பு சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. கங்குவா படம் மொத்தம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. அதனால்தான் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை.

kanguva suriya suriya fans

கங்குவா: கங்குவா படம் ரூபாய் 2000 கோடிகள் வரை வசூல் செய்யும் என தயாரிப்பாளர் தெரிவித்து வருகின்றார். மேலும் படத்தின் ரிலீஸுக்குப் பின்னர் படத்தின் வசூல் மற்றும் அதற்கு செலுத்தும் ஜி.எஸ்.டி பில்லினை வெளியிடப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுமட்டும் இல்லாமல் நவம்பரில் கங்குவா, ஜனவரியில் சூர்யா 44, அடுத்த ஆண்டு இறுதிக்குள் சூர்யா 45 என தொடர்ந்து படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளதால் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.

kanguva suriya suriya fans

மகள் படிப்பு: நடிகர் சூர்யா மகள் தியாவின் படிப்பிற்காக மும்பைக்கு குடிபெயர்ந்துவிட்டார். மேலும் தமிழில் இவர் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற, சூரரைப்போற்று படத்தின் இந்தி ரீ-மேக்கில் ஒரு காட்சியிலும் நடித்திருந்தார். ஆனாலும் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்தாலும், ஹிந்தியிலும் நடிக்க கதைகேட்டு வருகின்றார் என கூறப்படுகின்றது. மேலும் தான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட வாடிவாசல் படத்திற்காக தான் வளர்த்து வரும் காளையையும் கவனித்து வருகின்றார்.

மும்பை: இந்நிலையில் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சூர்யா சென்றுள்ளார். அங்கு அவர் வந்ததை அறிந்த ரசிகர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். இன்னும் சொல்லப்போனால் கேரவனில் இருந்து அவர் வெளியே வரமுடியாத அளவிற்கு ரசிகர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள், மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

kanguva suriya suriya fans

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X