'வேலைக்காரன்' படத்தின்போது மொபைலில் ஃப்ளாஷ் அடித்த ரசிகர்கள்... தியேட்டர்களில் பரபரப்பு!

By Vignesh Selvaraj

சென்னை : மோகன் ராஜா இயக்கத்தில் சிவகர்த்திகேயன், நயன்தாரா மற்றும் பலர் நடித்த 'வேலைக்காரன்' திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

'வேலைக்காரன்' படத்தில் மக்களுக்கு நல்ல சமூகக் கருத்தைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மோகன் ராஜா. சிவகார்த்திகேயன் பேசும் சில வசனங்களுக்கு திரையரங்கில் விசில் பறக்கிறது.

படத்தின் சில காட்சிகள் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றன. அவற்றில் ஒரு காட்சியில் ரசிகர்கள் தங்களது மொபைலில் ஃப்ளாஷ் லைட் ஆன் செய்து ஆதரவு தெரிவித்தனர்.

வேலைக்காரன்

வேலைக்காரன்

'வேலைக்காரன்' படம் உணவு அரசியலையும், கார்ப்பரேட் சதிகளையும் ஓரளவு நேர்மையாக எடுத்துக்காட்டியிருக்கிறது. சாமானிய மக்களும், நிறுவன ஊழியர்களும் பாதிக்கப்படுவது பற்றி வசனங்கள் இடம்பெறும்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்கிறார்கள்.

இரவு 12 மணி

இரவு 12 மணி

படத்தின் ஒரு காட்சியில், சிவகார்த்திகேயன், தனக்கு ஆதரவு தருவதாக இருந்தால் இரவு 12 மணிக்கு அவரவர் வீடுகளில் விளக்கை ஆன் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைப்பார். அதன்படி இரவு 12 மணியை நெரும்ங்கும்போது எல்லோரும் ஆவலாகக் காத்திருப்பார்கள்.

ஃப்ளாஷ் லைட் ஆன்

ஃப்ளாஷ் லைட் ஆன்

அந்தக் காட்சி திரையரங்கில் ஓடும்போது ரசிகர்களில் பாதிப் பேர் தங்களது மொபைல் போன்களில் ஃப்ளாஷ் லைட்டை ஆன் செய்து வெளிச்சம் காட்டி ஆரவாரம் செய்தனர். சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பலர் விசில் அடித்தும், ஆரவாரம் செய்தும் கொண்டாடினர். இது திரையரங்கில் சிறிது நேரம் பரபரப்பை உண்டாக்கியது.

வேலைக்காரன் கேட்பான்

வேலைக்காரன் கேட்பான்

"ஆபிஸர் கேட்கமாட்டான்... அத்தாரிட்டியும் கேட்காது... ஆனா நான் கேட்பேன்.. ஐ மீன் வேலைக்காரன் கேட்பான்" என சிவகார்த்திகேயன் சொல்லும் காட்சியில் தியேட்டரே விசில் சத்தத்தால் அதிர்ந்தது. முதல் காட்சியில் சிவா ரசிகர்கள் அதிகம் இருந்ததால் வசனங்களுக்கு ஆரவாரம் செய்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X