இந்தியன் 2 டிரெய்லரில் வரும் தாத்தா சேனாபதியே இல்லையா?.. என்னடா புதுசு புதுசா டீகோட் பண்றீங்க!

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் டிரெய்லர் வெளியானதில் இருந்தே நாடு முழுவதும் அந்த டிரெய்லரில் வரும் கமல்ஹாசனின் கேரக்டர் லுக் பற்றித் தான் பலரும் பேசி வருகின்றனர். 106 வயதில் இந்தியன் தாத்தா சேனாபதி இப்படி பறந்து பறந்து சண்டை போட முடியுமா? என பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், அது சேனாபதியாக இருக்க வாய்ப்பே இல்லை என்றும் இதை நோட் பண்ணீங்களா என ஒரு சில ரசிகர்கள் டீகோட் செய்து வருகின்றனர்.

அடுத்த மாதம் ஜூலை 12ம் தேதி இந்தியன் 2 திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக காத்திருக்கிறது. நாளை கல்கி திரைப்படத்தில் வில்லனாக கமல்ஹாசன் நடித்துள்ள நிலையில், 2 வார இடைவேளையில் அடுத்தடுத்து ஆண்டவர் தரிசனத்தை ரசிகர்கள் தியேட்டரில் காண காத்திருக்கின்றனர்.

indian 2 kamal haasan 2

பிராஸ்தெடிக் மேக்கப் போட்டுக் கொண்டு நடிப்பதெல்லாம் எனக்கு பக்கோடா சாப்பிடுவது போல என இந்தியன், அவ்வை சண்முகி, தசாவதாரம் உள்ளிட்ட படங்களில் காண்பித்து வந்த கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் மேலும், ஒரு படி மேலே சென்று பிராஸ்தெடிக் மேக்கப்பில் புகுந்து விளையாடி இருக்கிறார்.

சேனாபதியின் மகன் சந்துரு: இந்தியன் 2 படத்தில் வரும் தாத்தா இந்தியன் படத்தில் வந்த வீரசேகர சேனாபதியே கிடையாது என்றும் அவருடைய மகன் சந்துரு தான் சேனாபதி கெட்டப்பில் வந்து ஊழலை எதிர்த்து போராட காத்திருக்கிறார். ஷங்கர் அந்த ட்விஸ்ட்டை கடைசி வரை காப்பாற்றத்தான் எதையுமே ரிவீல் பண்ணாத வகையில் டிரெய்லரை வெளியிட்டுள்ளார் எனக் கூறுகின்றனர்.

indian 2 kamal haasan 2

அந்த காயத்தை பார்த்தீங்களா?: இந்தியன் படத்தில் தனது மகன் சந்துருவை சேனாபதி கத்தியால் கீறும் காயம் அப்படியே இந்தியன் 2 டிரெய்லரில் தாத்தாவாக வரும் கமல்ஹாசனின் முகத்தில் இருக்கிறது. நிச்சயம் இது சேனாபதி கிடையாது என்றும் சந்துரு தான் சேனாபதியாக மாறுகிறார். சேனாபதி மரணிக்காததை போலவே சந்துருவும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு உள்ளது. அதன் பின்னர் திருந்தி அப்பா செய்ய நினைத்ததை பெரிய அளவில் அவர் செய்வது போல கதையை ஷங்கர் உருவாக்கி இருந்தால் நிச்சயம் மிகப்பெரிய வெற்றிப் படமாக இது அமையும் என ஏகப்பட்ட டீகோடிங் செய்து வருகின்றனர்.

குஜராத் கார் நம்பர் பிளேட்: தங்கத்தினாலான குஜராத் கார் நம்பர் பிளேட் டிரெய்லரில் காட்டப் படுகிறது. படத்தில் தொழிலதிபர் என்கிற பெயரில் நாட்டை கொள்ளையடிக்கின்றனர் என்கிற விஷயம் எல்லாம் வரும் என தெரிகிறது. எப்படி இருந்தாலும் கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் திரைக்கதையை லாஜிக் உடன் தான் கொண்டு செல்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

indian 2 kamal haasan 2

கல்கிக்கும் ட்ரோல்: பெரிய பட்ஜெட் படங்களின் அப்டேட்டை ரசிகர்கள் கேட்பதும், அப்டேட்கள் வெளியான பின்னர் அதை நோண்டி கதை இப்படி இருக்குமா? அப்படி இருக்குமா? என கணிப்பதும் அதன் பின்னர் அவர்கள் நினைத்த கதை திரையில் வரவில்லை என்றால் படம் நல்லா இல்லை என்று சொல்வதுமாக ரசிகர்கள் மாறி விட்டனர் என்கின்றனர். கல்கி படம் டூன், ஸ்டார் வார்ஸ் காப்பி என்று சொன்னாலும், நாளை வெளியாக உள்ள படத்தை முதல் நாளே பார்த்து விட முண்டியடிப்பதும் இதே ரசிகர்கள் தான். கல்கி படம் வெற்றி பெறும் பட்சத்தில் தமிழில் உருவாகி உள்ள பிரம்மாண்ட படமான இந்தியன் 2 படத்துக்கும் ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X