twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தேர்வை முடித்ததும் ஸ்ரீதேவிக்காக நேராக பிணவறைக்கு சென்ற பள்ளி மாணவி

    By Siva
    |

    Recommended Video

    ஸ்ரீதேவிக்காக நேராக பிணவறைக்கு சென்ற பள்ளி மாணவி- வீடியோ

    துபாய்: துபாயில் உள்ள தடயவியல் துறை கட்டிடம் முன்பு ஸ்ரீதேவியின் ரசிகர்கள் கவலையுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    உறவினரின் திருமணத்திற்காக துபாய் சென்ற இடத்தில் நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம் அடைந்தார். பிரேத பரிசோதனை முடிந்துள்ள நிலையில் அவரின் உடல் இன்று இரவு இந்தியா கொண்டு வரப்படுகிறது.

    பிரேத பரிசோதனை முடிந்தும் அவரின் உடலை தடயவியல் துறை இன்னும் ஒப்படைக்கவில்லை.

    கவலை

    கவலை

    ஸ்ரீதேவியின் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்த்துவிடும் ஆசையில் அவரின் ரசிகர்கள் தடயவியல் துறை கட்டிடம் முன்பு காலையில் இருந்து காத்துக் கிடக்கிறார்கள்.

    பெரியவர்

    பெரியவர்

    12 வயது பள்ளி மாணவி அக்ஷரா ரஜத் முதல் 45 வயது சிவில் என்ஜினியர் வரை தடயவியல் துறை கட்டிடம் முன்பு காத்துக் கிடக்கிறார்கள். மாணவிக்கு இன்று பள்ளியில் தேர்வு இருந்தது.

    ஸ்ரீதேவி

    ஸ்ரீதேவி

    தேர்வை முடித்த கையோடு நேராக தடயவியல் துறை கட்டிடம் இருக்கும் இடத்திற்கே தனது தந்தையுடன் வந்துவிட்டார் மாணவி அக்ஷரா. தனக்கு பிடித்த நடிகை இறந்த கவலை அக்ஷராவின் முகத்தில் உள்ளது.

    சென்னை

    சென்னை

    துபாயில் வேலை பார்க்கும் ராஜகோபாலனும் ஸ்ரீதேவியின் முகத்தை காண காத்துக் கொண்டிருக்கிறார். எங்கள் தமிழகத்தை சேர்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் எங்களின் பெருமை என்று தெரிவித்துள்ளார் ராஜகோபாலன்.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    துபாயில் பணியாற்றும் சென்னையை சேர்ந்த என்ஜினியர் உஸ்மான் காலை 10 மணியில் இருந்தே காத்துக் கொண்டிருக்கிறார். ஸ்ரீதேவி இறந்துவிட்டதாக என் சகோதரி போன் செய்து கூறினார். என்னால் அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை என்றார் உஸ்மான்.

    English summary
    Die-hard fans of legendary actress Sridevi have thronged the forensic department building in Dubai to have a last glimpse of their favourite star.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X