என்னடா பொரி உருண்டை பாக்கெட்லாம் தூக்கிப் போடுறீங்க.. விஜய்யோட ரியாக்‌ஷன் தான் செம!

சென்னை: திருவள்ளூர் டு சென்னை என நேற்று விஜய் நடத்திய ரோடு ஷோ வேறலெவலில் சோஷியல் மீடியாக்களில் டிரெண்டாகி வருகிறது. திருவள்ளூர், கவரப்பேட்டை, செங்குன்றம், மாதவரம், கோயம்பேடு, வில்லிவாக்கம் என சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று விஜய் தனது ரோடு ஷோவை நடத்திய நிலையில், ஒட்டுமொத்த மக்களும் சாலைகளில் திரண்டு விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இளம்பெண்கள் முதல் வயதானவர்கள், குழந்தைகள் என பலரும் விஜய்யை காண கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலையில் நின்று காத்திருந்தனர். சில பெண்கள் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் மயக்கம் போட்டு விழ காவலர்கள் அவர்களை தூக்கிச் சென்ற பதைபதைக்கும் காட்சிகளும் அரங்கேறினர்.

Fans throwed Pori Urundai packet to Vijay at Tiruvallur to Chennai Rally

பெண்களை இடித்துக் கொண்டு கூட்டம் அதிகரித்து விஜய்யை செல்ஃபி எடுக்க முயற்சி செய்ய விஜய் கோபமாகி கத்திய காட்சிகள் தீயாக பரவி வர, ஒரு ரசிகர் விஜய்க்கு பொரி உருண்டை பாக்கெட்டை தூக்கிப் போட்ட காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

விஜய்க்கு கையெல்லாம் ரத்தம்: ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் விஜய்யை காணும் ஆர்வத்தில் அவருக்கு கூல்ட்ரிங்ஸ் பாட்டில்களை தூக்கி எறிவது, தர்பூசணி பழத்தை தூக்கி எறிவது என உள்ளனர். பூ மாலைகள், கட்சித் துண்டுகளைத் தாண்டி தற்போது பெரிய ஐட்டமாக வீசி வருகின்றனர். பொக்கே ஒன்று வீசும் போது விஜய்க்கு அதில் இருந்த முள் குத்தி கையெல்லாம் ரத்தம் வந்துவிட்டதாக ராஜ்மோகன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறினார். ஆனாலும், விஜய் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சிரித்த முகத்துடன் மக்களின் அன்பை ஏற்று வருகிறார் என்றார். திருவள்ளூர் டு சென்னையை நேற்று விஜய் கவர் செய்த நிலையில், ஏகப்பட்ட மக்கள் விஜய்க்கு ஃபுட்பால் முதல் எம்ஜிஆர் சிலை வரை பரிசாக வழங்கினர்.

பொரி உருண்டை பாக்கெட்: பரிதாபங்கள் கோபி சுதாகர் சமீபத்தில் வெளியிட்ட பிரச்சாரம் பாவங்கள் வீடியோவில் விஜய்க்கு ரசிகர்கள் சைக்கிள் முதல் உலகத்தையே உங்க காலடியில் போடுகிறோம் தலைவா என உலகத்தையே தூக்கிப் போட்டதாக வீடியோ வெளியிட்டு கலாய்த்த நிலையில், தற்போது ரசிகர் ஒருவர் பொரி உருண்டை பாக்கெட்டை விஜய்யிடம் தூக்கி எறிந்தார். அதை பார்த்து என்னவென்று தெரியாமல் விஜய்யிடம் பாடிகார்ட் காட்ட விஜய் சிரித்துக் கொண்டே அதை வாங்கி வைத்துக் கொண்டார். இன்றுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடியவுள்ள நிலையில், இன்றும் விஜய் பிரச்சாரத்துக்காக வெளியே வருவாரா? அல்லது இன்னைக்கும் ரெஸ்ட்டா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X