சார்.. தமன்னா சார்.. தமன்னா.. ஜொள்ளு விட்ட ரசிகர்கள்.. க்யூட் ரியாக்‌ஷன் கொடுத்த கிளாமர் குயின்!

மும்பை: தென்னிந்திய ஸ்டாராக இருந்த தமன்னா ஓடிடி தளங்கள் வந்த பின்னர் இப்போது பான் இந்தியா ஸ்டாராக உள்ளார். இந்தியாவில் எந்த மாநிலத்திற்கு அவர் போனாலும் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்து வருகிறார்கள். அந்த அளவிற்கு தமன்னா இந்திய அளவில் புகழ் பெற்றவராக மாறிவிட்டார். இப்படியான நிலையில், பொது வெளியில் தன்னைச் சந்தித்த ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுக்க ஆசை பட்டதால், அவர்களுடன் ஜாலியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தமன்னா இப்போது எல்லாம் நடிகை என எந்த அளவிற்கு அறியப்படுகிறாரோ அதே அளவிற்கு ஐட்டம் டான்ஸ் பாடலுக்கும் நடனம் ஆடக் கூடியவர் எனவும் அறியப்படுகிறார். கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை இவர் டான்ஸ் ஆடுகிறார் என்றால் அந்த படத்திற்கான வசூல் தரமாக இருக்கும் என தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள்.

Tamannaah Bhatia Tamannaah Tamannaah Video

இதெல்லாம் ஒரு புறம் இருக்க லஸ்ட் ஸ்டோரீஸில் தமன்னா தனது காதலர் விஜய் வர்மாவுடன் இணைந்து நடித்திருந்த பெட்ரூம் காட்சிகள் எல்லாம் கவர்ச்சியின் உச்சம். இந்த வெப் சீரிஸில் இவரது நடிப்புக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தது. கிளாமரைக் கடந்து, இவரது நடிப்பு பலரையும் வாயடைக்க வைத்தது. மேலும் பாலிவுட்டில் நீடிக்க கிளாமர் 90 சதவீதம் உதவும் என்பதை தமன்னா புரிந்து வைத்துள்ளார் எனவும் இணையவாசிகள் மத்தியில் பேச்சுகள் எழுந்தது.

Tamannaah Bhatia Tamannaah Tamannaah Video

தமன்னா: ஒரு 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை, சினிமா உலகில் ஒரு நடிகை கவர்ச்சியில் களம் இறங்கி விட்டால் அடுத்த சில ஆண்டுகளில் காணாமல் போய்விடுவார். காரணம், புதுமுக நடிகைகள் வந்துவிடுவார்கள். மார்க்கெட்டில் மூத்த நடிகைகளுக்கான மவுசும் குறைந்துவிடும். இதனால் கவர்ச்சியில் களம் இறங்குவார்கள். அதன் பின்னர் வேறொரு கதாநாயகி அவங்க என்ன கவர்ச்சி காட்டுறாங்க நான் காட்டுறேன் பாருங்க என கிளாமரில் 100 மார்க் வாங்க எல்லா முயற்சிகளையும் செய்வார்கள்.

Tamannaah Bhatia Tamannaah Tamannaah Video

2வது இன்னிங்ஸ்: லஸ்ட் ஸ்டோரீஸில் அவர் காட்டிய கவர்ச்சி என்பது இதுவரை எந்த முன்னணி கதாநாயகிகளுமே காட்டாத கவர்ச்சி என பல விமர்சகர்கள் கூறினார்கள். இனி தமன்னா ஓரம் கட்டப்பட்டு விடுவார் என பலரும் கூறிய நிலையில், தமன்னா தனது இரண்டாவது அத்தியாத்தை தொடங்கியுள்ளார். அரண்மனை 4 படம் கடந்த ஆண்டு வெளியான படங்களில் மெகா ஹிட் அடித்த படம். அப்படி இருக்கும்போது, தமன்னாவின் மார்க்கெட் இன்னும் உயர்ந்தது.

Tamannaah Bhatia Tamannaah Tamannaah Video

ரசிகர்கள்: தமன்னா இப்போது பாலிவுட் படங்களில் வெப் சீரிஸ்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இதனால் மும்பையில் குடியேறிவிட்டார். இப்படி இருக்கும்போது, தமன்னாவை பொது வெளியில் பார்த்த ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டார்கள். இதனைப் புரிந்து கொண்ட தமன்னா, ரசிகர்களுடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார். சில ரசிகர்கள் அவருடன் சேர்ந்து ஹார்ட்டின் போல கைகளை வைக்க ஆசைப்பட்டனர். அதற்கு தமன்னா கொஞ்சமும் மறுப்பு சொல்லாமல் ஹார்ட்டின் போல கையை வைத்தார். ஒரு ரசிகருக்கு அவரே சொல்லியும் கொடுத்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Tamannaah Bhatia Tamannaah Tamannaah Video

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X