அழகுதேவதை சாயிஷாவைக் கண்டு கொள்ளாமல்.. ‘நயன்’ காதலருடன் மட்டும் செல்பி எடுத்த ரசிகர்கள்!

ஜூங்கா படப்பிடிப்பின் போது பிரான்ஸ் நாட்டில் யோகிபாபுவுடன் அதிக மக்கள் செல்பி எடுத்துக் கொண்டது தெரிய வந்துள்ளது.

Recommended Video

வெள்ளைக்காரர்களை புளியோதரை சாப்பிட வைத்த விஜய் சேதுபதி..வீடியோ

சென்னை: ஜுங்கா பட ஷூட்டிங்கின்போது விஜய் சேதுபதி, சாயிஷா முன்பு பிரான்ஸ் நாட்டு மக்கள் யோகிபாபுவுடன் அதிகளவில் செல்ஃபி எடுத்துக்கொண்டது தற்போது தெரிய வந்துள்ளது.

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கு வெற்றிக்கு பிறகு, விஜய் சேதுபதி, இயக்குனர் கோகுல் இணைந்துள்ள படம் ஜுங்கா. இந்த படத்தை, நடிகர் அருண்பாண்டியனுடன் இணைந்து விஜய் சேதுபதி தயாரித்துள்ளார்.

சாயிஷா, மடோனா செபாஸ்டின், யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.

ஜுங்கா படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. விழாவை மா.க.ப.ஆனந்தும், விஜய் டி.வி. பிரியங்காவும் தொகுத்து வழங்கினர்.

யோகிபாபு காட்சிகள்:

யோகிபாபு காட்சிகள்:

நிகழ்ச்சியில் யோகிபாபு பங்கேற்காததால், படத்தில் அவரது பங்களிப்பு பற்றி தொகுப்பாளர்கள் கேட்டனர். அப்போது பேசிய விஜய் சேதுபதி, படத்தில் யோகிபாபு நடித்துள்ள காட்சிகளை விவரித்தார்.

யோகிபாபுவின் பலம்:

யோகிபாபுவின் பலம்:

இது தொடர்பாக விழாவில் அவர் பேசியதாவது, "யோகிபாபுக்கு பலமே அவரது கவுன்டர் தான். ஷூட்டிங்கின் போது அவராக ஒரு கவுன்டர் தருவார். அது செமயாக இருக்கும். அப்படி நிறைய கவுன்டர்கள் இந்த படத்தில் உள்ளது. தன் மீது அவருக்கு நிறைய நம்பிக்கை உள்ளது.

போட்டோ:

போட்டோ:

ஒரு நாள் பிரான்ஸ் நாட்டில் லோலிகிரியா பாடலை படமாக்கிக்கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த அந்நாட்டு மக்கள் சிலர், ஒரு போட்டோவை காட்டி, அதில் இருப்பவர் போலவே யோகிபாபு இருக்கிறார் எனக் கூறினர்.

யோகிபாபுவுடன் மட்டும்:

யோகிபாபுவுடன் மட்டும்:

இதையடுத்து அவர்கள் யோகிபாபுவுடன் போட்டோ எடுத்துக்கொண்டனர். நானும், சாயிஷாவும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தோம். எனவே இங்கு ஸ்டிரைக் என்றாலும் அவருக்கு கவலையில்லை. பிரான்ஸ் சென்று பிழைத்துக்கொள்ளலாம்" என நகைச்சுவையாக அவர் கூறினார்.

நயனின் ரீல் காதலர்:

நயனின் ரீல் காதலர்:

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களுள் ஒருவராக யோகிபாபு தற்போது உள்ளார். கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவை ஒருதலையாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் யோகிபாபு நடித்துள்ளார். அப்படத்தில் இடம்பெற்ற ‘கல்யாண வயசு' பாடல் வைரலானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X