அய்யோ.. இன்னையோடு முடியப் போகுதா.. சோகத்தில் ரசிகர்கள்.. குக் வித் கோமாளி 2 கிராண்ட் ஃபினாலே!
சென்னை: தமிழ் ரசிகர்களை கடந்த சில மாதங்களாக வயிறு குலுங்க சிரிக்க வைத்து வந்த குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று நடைபெறுகிறது.
இந்த முறை டிஆர்பி கிங்கான பிக் பாஸ் நிகழ்ச்சியையும் ஓரங்கட்டி விட்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மனங்களை வென்றது.
இன்றுடன் அந்த நிகழ்ச்சி முடிவதை அறிந்த ரசிகர்கள் மிகவும் சோகம் அடைந்துள்ளனர். அடுத்த சீசனை சீக்கிரமே ஆரம்பியுங்க என #CookuWithComali2 ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

குக் வித் கோமாளி 2
சமையல் நிகழ்ச்சியை இந்த அளவுக்கு காமெடியாக கொண்டு போக முடியும் என யாருமே எதிர்பார்த்திராத நேரத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி விஜய் டிவியில் பட்டையை கிளப்பி வருகிறது. இன்று குக் வித் கோமாளியின் பிரம்மாண்ட கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

சிம்பு முதல் ரஹ்மான் வரை
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடகி தீ, பாடகர் அறிவு மற்றும் காணொளி வாயிலாக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். கனியை ஃபைனலுக்கும் காரக் குழம்பு தானா என ரஹ்மான் கலாய்த்த விதம் ரசிகர்களை சிரிப்பு வெள்ளத்தில் ஆழ்த்தி உள்ளது.

கண்ணீர் விட்ட ஷிவாங்கி
குக் வித் கோமாளி சீசன் 2வின் கடைசி நாள் இன்று, கடந்த 5 மாதங்களாக ஏகப்பட்ட சந்தோஷங்களும், கொண்டாட்டங்களு, குறும்புத்தனங்களும் நிறைந்து இருந்தன என கண்ணீர் விடும் எமோஜியுடன் ஷிவாங்கி போட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.
சிரிப்புக்கு கியாரண்டி
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமே குக்கை விட அவர்கள் கூடவே இருந்து காமெடி செய்யும் கோமாளிகள் தான். ஷகிலா, கனி, அஸ்வின், பவித்ரா லக்ஷ்மி என ஏகப்பட்ட குக்குகள் இருந்தாலும், ஷிவாங்கி, மணிமேகலை, கேபிஒய் பாலா, புகழ் என கோமாளிகள் செய்யும் அட்டகாசங்கள் தான் இந்த ஷோவை வேற லெவலுக்கு கொண்டு சென்றது.

ரசிகர்கள் சோகம்
கடந்த 5 மாதங்களாக ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய குக் வித் கோமாளி சீசன் 2 இன்றுடன் முடிய உள்ள நிலையில், அதன் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இனி இப்படியொரு சீசன் வருமான்னு தெரியலையே என்றும், ஷிவாங்கியின் ரசிகர்கள் ஏகப்பட்ட ட்வீட்களை பதிவிட்டு வருகின்றனர்.
அழுகையா வருது
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடித்து பிரபலமான நடிகர் புகழுக்கு சிம்பு, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மிஸ் யூ சோ மச் மக்களே மற்றும் என்னுடைய குக் வித் கோமாளி டீம் ரொம்ப கஷ்டமா இருக்கு.. அழுகையா வருது என போஸ்ட் வைத்து ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications











